Published : 24 Jan 2020 11:18 AM
Last Updated : 24 Jan 2020 11:18 AM

5-ம் வகுப்பு பொதுத்தேர்வு: மாதிரி வினாத்தாள் வெளியீடு

5-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டத் திருத்தங்களின்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு நடப்புக் கல்வி ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும். முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும் மாணவர்கள் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.

அதன்படி 5, 8-ம் வகுப்புக்கு ஏப்ரலில் பொதுத்தேர்வு நடைபெறஉள்ளது. நடப்புக் கல்வி ஆண்டில் 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை 17 லட்சம் பேர் வரை எழுதவுள்ளனர். தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் இதுவரை வெளியாகவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் 5-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. முப்பருவ பாடத்திட்ட அடிப்படையில் தேர்வுகள் நடைபெற உள்ளன. பொதுத் தேர்வு 60 மதிப்பெண்களுக்கு நடைபெறுகிறது. 40 மதிப்பெண்கள் அக மதிப்பீடாக வழங்கப்படும்.

இந்நிலையில் 5-ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட தேர்வுகள் மட்டுமே நடைபெறும். அவற்றுக்கான மாதிரி வினாத்தாள்கள் மூன்று பருவங்களில் இருந்தும் கேட்கப்பட்டு, தற்போது வெளியிடப்பட்டுள்ளது. எனினும் 8-ம் வகுப்புக்கான மாதிரி வினாத்தாள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x