Published : 24 Jan 2020 09:18 AM
Last Updated : 24 Jan 2020 09:18 AM

காரைக்கால் பள்ளியில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் பணிவாக இருக்க வேண்டும்: பள்ளி மாணவர்களுக்கு காவல் துறை அதிகாரி அறிவுரை

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பணிவாக இருக்க வேண்டும் என்று காரைக்கால் பள்ளியில் நடந்த கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் காவல் துறை அதிகாரி கே.எல்.வீரவல்லபன் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.

கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

காரைக்கால் மாவட்ட பெற்றோர் ஆசிரியர் நலச்சங்கத்தின் சார்பில் தலத்தெரு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில்,மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் துணை முதல்வா் கே.ராஜசேகரன் தலைமை வகித்தார். சங்கத்தின் தலைவர் அ.வின்சென்ட் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து விளக்கினார். காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே.கோவிந்தராஜன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதில் காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் கே.எல்.வீரவல்லபன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறும்போது, "ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு பணிந்து நடக்கும் வழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாணவர்கள் ஒரு சிந்தனையை,குறிக்கோளை அடிப்படையாகக்கொண்டு, அதை நோக்கி தங்கள் கல்விப் பயணத்தை தொடர வேண்டும். சரியான நேரத்தில் உணவுஉண்ணுதல், உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் உள்ளிட்ட விஷயங்களிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

புதுவை பல்கலைக்கழக காரைக்கால் கிளை உதவி பேராசிரியர் வி.அருள்முருகன், பெற்றோர் ஆசிரியர்நலச்சங்க செயலாளர் கே.ரவிச்சந்திரன், துணை செயலாளர் ஏ.நெல்சன் உள்ளிட்ட நிர்வாகிகள், மாணவ,மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக, பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் எம்.விஸ்வேஸ்வரன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x