Published : 23 Jan 2020 05:35 PM
Last Updated : 23 Jan 2020 05:35 PM

டிப்ளமோ மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு 

ஜூன் 2020 தொடக்கக்கல்வி டிப்ளமோ தேர்வுக்கான கால அட்டவணையை அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

''ஜூன் 2020 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு வருகை புரியும் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் / தனித்தேர்வர்களுக்கான இரண்டாமாண்டுத் தேர்வு 03.06.2020 முதல் 19.06.2020 வரையிலும், முதலாமாண்டுத் தேர்வு 04.06.2020 முதல் 22.06.2020 வரையிலும் நடைபெற உள்ளது.

அதற்கான பாடவாரியாக தேர்வுக்கால அட்டவணையும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விரிவாக அறிந்து கொள்ளலாம்''.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x