Published : 23 Jan 2020 11:28 AM
Last Updated : 23 Jan 2020 11:28 AM

வைரலான வாய்ப்பாடு வீடியோ: ஆனந்த் மகேந்திரா, ஷாருக் கான் பெருமிதம்

ஒன்பதாம் வாய்ப்பாடு கற்றுக்கொள்வது குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ஆனந்த் மகேந்திரா, ஷாருக் கான் ஆகியோர் வீடியோவைப் பாராட்டியுள்ளனர்.

அந்த வீடியோவில், பள்ளி வகுப்பறையில் ஆசிரியை ஒருவர் மாணவர்களுக்கு கணிதத்தைக் கற்பித்து வருகிறார். குறிப்பாக 9-ம் வாய்ப்பாட்டை எளிமையாகப் புரிந்துகொள்வது எப்படி? என்பது குறித்து சொல்லித் தருகிறார். மாணவர்களும் ஆசிரியரைப் பின்பற்றி கணக்கைச் சரியாகச் சொல்கின்றனர்.

இந்த வீடியோவைப் பகிர்ந்த மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகேந்திரா, "என்ன?? இத்தனை எளிமையான வழிமுறை குறித்து எனக்குத் தெரியாமல் போய்விட்டது. இவர் என்னுடைய கணித ஆசிரியராக இருந்திருக்கலாம். அப்படி நடந்திருந்தால், கணக்குப் பாடத்தில் இன்னும் நிறைய கற்றுக் கொண்டிருப்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.

மகேந்திரா பதிவிட்ட சில மணிநேரங்களிலேயே அவர் ட்வீட், வைரலானது.

மகேந்திராவின் பதிவைக் குறிப்பிட்டு பாலிவுட் நடிகர் ஷாருக் கானும் ஷேர் செய்தார். இந்த வழிமுறை குறித்து அவர் கூறும்போது, "இந்த எளிமையான கணக்கு, என் வாழ்க்கையில் எத்தனை பிரச்சினைகளைத் தீர்த்திருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. இதைக் கற்பித்தல் முறைகளில் சேர்த்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x