Published : 23 Jan 2020 08:11 AM
Last Updated : 23 Jan 2020 08:11 AM

தனியார் நிறுவனங்களில் காலியிடம்; மத்திய அரசு நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்: சென்னையில் பிப்.3-ம் தேதி நடக்கிறது

சென்னை

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு ஆட்களை தேர்வுசெய்வதற்கான முகாம் மற்றும்கண்காட்சி வரும் பிப்.3-ம்தேதி சென்னையில் நடக்கிறது.

இந்த முகாமை அமைச்சகத்தின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மையம், சுருக்கெழுத்தாளர் சங்க நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

இதில் பல்வேறு தனியார் நிறுவனங்களில் காலியாகஇருக்கும் பிபிஓ, வங்கி, காப்பீடு, ஈ-வர்த்தகம், கல்வி, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளின் காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மாத ஊதியம் ரூ.10 ஆயிரம்முதல் ரூ.30 ஆயிரம் வரை கிடைக்கும். வயது வரம்பு 20 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம். பட்டதாரிகள், அதற்கும் மேல்கல்வித்தகுதி உடையவர்களும் 12-ம் வகுப்பு பயின்றவர்களும் பணிக்கு பரிசீலிக்கப்படுவார்கள்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எனினும், பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களும் கல்வித் தகுதி, அனுபவத்தின் அடிப்படையில் பரிசீலிக்கப்படுவார்கள். இதுதவிர தேசியவேலைவாய்ப்பு சேவை (என்சிஎஸ்) இணைய தளத்திலும் விண்ணப்பதாரர்கள் இலவசமாக பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவு செய்ய ஆதார் எண் அவசியமாகும். இந்த முகாம் சென்னை தி.நகர், சிவா விஷ்ணு கோயிலுக்கு பின்புறமுள்ள சுருக்கெழுத்தாளர் சங்கத்தில் நடைபெறுகிறது. கூடுதல் விவரங்களுக்கு 044-24615112, 044-24342421, 24337387 ஆகியஎண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தேசிய வேலைவாய்ப்பு சேவை மைய உதவிமண்டல அதிகாரி சுஜித்குமார்சாஹூ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x