Published : 22 Jan 2020 06:01 PM
Last Updated : 22 Jan 2020 06:01 PM

ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் எப்போது?- ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

2020-21 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு அறிவிப்பு ஜூலை 1-ம் தேதி வெளியாகும் என்றும் இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு அறிவிப்பு ஜூலை 9-ம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு அறிவிப்பாணை ஜூலை 17-ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு மே 4-ம் தேதி வெளியாகிறது. தகுதித் தேர்வுகள் ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று உத்தேசப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வு பிப்ரவரி 15, 16-ம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மையத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு மே 2, 3-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x