Published : 22 Jan 2020 11:10 AM
Last Updated : 22 Jan 2020 11:10 AM

மொழிபெயர்ப்பு - மனிதர்களின் நடவடிக்கையால் பேரழிவில் சிறிய உயிரினங்கள்: புதிய ஆய்வு

லண்டன்

Human activity reducing numbers of predatory animals: Study

London

Predatory animals, especially small invertebrates like spiders and ladybird beetles, are most likely to be lost when natural habitats are converted to agricultural land, or towns and cities, according to a global study

Small ectotherms -- cold blooded animals such as invertebrates, reptiles and amphibians, large endotherms, including mammals and birds, and animals that eat fungi were also disproportionally affected, researchers said.

The reduction in numbers is in abundance of 25-50 per cent compared to natural habitats, according the researchers from the University College London (UCL) in the UK.

The study, published in the journal Functional Ecology, analysed over one million records of animal abundance at sites rangingfrom primary forest to intensively managed farmland, and cities. The data represented over 25,000 species across 80 countries.

Species ranged from the oribatid mite weighing only 2x10-6 grammes, to an African elephant weighing 3,825 kilogrammes.

"Normally when we think of predators, we think of big animals like lions or tigers," said lead author of the research, Tim Newbold from UCL.

"These large predators did not decline as much as we expected with habitat loss, which we think may be because they have already declined because of human actions in the past (such as hunting)," Newbold said.

The researchers found that small predators -- such as spiders and ladybirds -- show the biggest declines.

The results indicate that the world's ecosystems are being restructured with disproportionate losses at the highest trophic levels -- top of the food chain.

- PTI

மனிதர்களின் நடவடிக்கையால் பேரழிவில் சிறிய உயிரினங்கள்: புதிய ஆய்வு

பிற விலங்குகளைக் கொன்று தின்கின்ற விலங்கினங்கள் அழிந்துவருகின்றன. குறிப்பாக முதுகெலும்பில்லாத சிலந்தி,வண்டுகள் போன்றவை பேரழிவில் உள்ளன. இயற்கை சூழலை விவசாயநிலங்களாகவும் சிற்றூர்களாகவும் நகரங்களாகவும் மனிதர் மாற்றிக்கொண்டிருப்பதினால்தான் இத்தகையநிலை ஏற்பட்டிருப்பதாக உலக அளவிலான ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

முதுகெலும்பில்லாத பிராணிகள், ஊர்வன, நீர்நில வாழ் உயிரினங்கள், பாலூட்டிகள், பறவைகள், பாசியைத் தின்னக்கூடிய விலங்குகள் உள்ளிட்டவை இதனால் பேரழிவை சந்தித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். 20-ல் இருந்து 25சதவம்வரை உயிரினங்கள் அழிந்துவிட்டதாக பிரிட்டனில் உள்ள லண்டன் பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வனப் பகுதிகள் தொடங்கி விவசாய நிலங்கள், நகர்புறங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு, ‘ஃபங்ஷனல் ஈகாலஜி’ ஆய்விதழில் வெளியாகி உள்ளது. 80 நாடுகளில் உள்ள 25,000-த்துக்கும் மேற்பட்ட உயிரினங்கள் பற்றிய தகவல்கள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2X10-6 கிராம் எடை என அளவில் மிகச் சிறிய பூச்சிகள் தொடங்கி 3,825 கிலோ எடை கொண்ட ஆப்பிரிக்க யானை வகைகள் வரை இந்த ஆய்வில் இடம்பெற்றுள்ளன.

“பிற விலங்குகளைக் கொன்று தின்கின்ற விலங்குகள் என்றதும் சிங்கம் அல்லது புலி போன்ற பெரிய விலங்குகளைத்தான் நாம் நினைத்துப் பார்க்கிறோம். ஆனால், உண்மையில் மனிதர்கள் காடுகளை அழித்து வருவதால் இவற்றைக் காட்டிலும் அதிகம் அழிந்துகொண்டிருப்பவை சிறிய உயிரினங்களே. வேட்டை ஆடுதல் உள்ளிட்ட செயல்பாடுகளால் ஏற்கெனவே பெரிய விலங்குகளை அழித்துவிட்டோம் என்றும் இதனை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்” என்கிறார் இந்த ஆய்வுக் குழுவுக்குத் தலைமை தாங்கும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் ஆராய்ச்சியாளர் டிம் நியூபோல்ட்.

அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவை சிலந்தி மற்றும் வண்டுகள் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் உணவு சங்கிலி அறுபடும். அதன் விளைவாக உலக சூழலியல் அமைப்பில் சமமற்ற நிலை ஏற்படும் என்றும் இந்த ஆய்வு எச்சரித்துள்ளது.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x