Published : 22 Jan 2020 07:57 AM
Last Updated : 22 Jan 2020 07:57 AM

வாழ்க்கை சூழ்நிலைகளை எதிர்கொள்ள கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும்: லோக்பால் தலைவர் பினாக்கி வலியுறுத்தல்

வாழ்க்கையின் யதார்த்த சூழல்களை புரிந்து கொண்டு அதனை எதிர்கொள்ள தேவையான வழிமுறைகளை கல்வி கற்று கொடுக்க வேண்டும் என்று லோக்பால் நீதிபதி பினாக்கி சந்திர கோஸ் வலியுறுத்தியுள்ளார்.

பிஹார் மாநிலம் புவனேஸ்வரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் லோக்பால் சேர்மன் நீதிபதி பினாக்கி சந்திர கோஸ் பேசியதாவது:

கல்வி மூலம் வெறும் வேலையை மட்டும்தான் பெற முடியும் என்று மக்கள் நினைத்துள்ளனர். ஆனால், கல்வி என்பது வாழ்க்கையின் முழுமையான செயல்முறையாகும். கல்வியில் இருந்து கற்றுக் கொண்டதன்மூலம், மாணவர்கள் தங்கள் வாழ்வினை ஒளிரச் செய்யவேண்டும். கல்வி என்பது கற்றல், பகிர்தல், நடைமுறை அறிவு மற்றும் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளை எதிர்
கொள்ளும் திறன்களை வளர்க்க வேண்டும். கல்வி என்பது மனிதனின் முழுமையின் வெளிப்பாடு என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.

பெற்றோர்கள் மாணவர்கள் கல்வி விஷயத்தில் சுயநலமாக இருக்கக்கூடாது. படிப்பு தொடர்பான விஷயங்களை சக மாணவர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம் என்று சில பெற்றோர்கள் தமது குழந்தைகளை அறிவுறுத்துகிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தையை இவ்வாறு வழிநடத்தக்கூடாது.

படிப்பு தொடர்பான விஷயங்களை சக மாணவர்களிடம் பகிர்ந்துக் கொண்டால்தான் தங்களது குழந்தையின் அறிவு பெருகும் என்பதை பெற்றோர்கள் முதலில் புரிந்துக் கொள்ளவேண்டும். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது, வாழ்க்கை
நடைமுறைகளையும் கற்றுக் கொடுக்கவேண்டும்.

அப்போதுதான், மாணவர்களுக்கு கல்வியை எல்லா இடத்திலும் பயன்படுத்த உதவியாக இருக்கும். பரிவு, அன்பு ஆகியவற்றை பரவச் செய்யாமல் கற்கும் கல்வி எதற்கும் பயனில்லை. கல்வி என்பது வாழ்க்கையை வடிவமைக்கவும், நல்ல மனிதனை உருவாக்கவும் புதிய யோசனைகளை ஒருங்கிணைக்கும் ஒரு நபரை உருவாக்கவும் வேண்டும். இதுபோன்ற வழிமுறைகளை கொண்ட கல்வியை கல்வியாளர்கள் உருவாக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி பினாக்கி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x