Published : 21 Jan 2020 05:51 PM
Last Updated : 21 Jan 2020 05:51 PM

தமிழகம் வரும் 110 காஷ்மீர் மாணவர்கள்: கல்வி பரிமாற்ற நிகழ்வு

'சமக்ர சிக்‌ஷா' பரிமாற்ற நிகழ்வின் ஒரு பகுதியாக 110 காஷ்மீர் அரசுப்பள்ளி மாணவர்கள், தமிழ்நாடு வர உள்ளனர்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் முன்னெடுப்பில், சமக்ர சிக்‌ஷா என்னும் செயல்திட்டத்தின் மூலம் மழலையர் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை மாணவர் பரிமாற்ற நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து நிலைகளிலும் சமமான தரமான கல்வி கிடைப்பது இத்திட்டம் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், காஷ்மீரின் தோடா, ரம்பான், கிஸ்த்வார் மாவட்டங்களைச் சேர்ந்த உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்குக் கிளம்பினர்.

இவர்களின் பயணத்தை பள்ளிக் கல்வித்துறை செயலர் ஹிர்தேஷ் குமார் சிங் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, ''நாடு முழுவதும் கல்வியின் தரம், அதன் வசதிகள் எப்படி இருக்கிறது என்பது குறித்து எங்கள் மாணவர்கள் அறிந்துகொள்ள இத்திட்டம் உதவியாக இருக்கும்.

தங்களுடைய நாட்டைக் குறித்து அவர்கள் இன்னும் அதிகமாக அறிந்துகொள்ளவும் தாய்நாட்டின் கலாச்சாரம், வரலாறு குறித்து அறிந்துகொள்ளவும் உதவும்'' என்று தெரிவித்தார்.

இதுவரை சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ், சுமார் 3,000 காஷ்மீர் மாணவர்கள் நாடு முழுவதும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x