Published : 21 Jan 2020 04:51 PM
Last Updated : 21 Jan 2020 04:51 PM

ஐஐடி அல்லாத மாணவர்களுக்கு உதவித்தொகையோடு கூடிய ஃபெல்லோஷிப்: சென்னை ஐஐடி அறிவிப்பு

ஐஐடி அல்லாத மாணவர்களுக்கு உதவித்தொகையோடு கூடிய ஃபெல்லோஷிப் குறித்து சென்னை ஐஐடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஐஐடி அல்லாத மாணவர்களிடையே ஐஐடியின் அனுபவத்தை உணர வைக்கவும் ஆராய்ச்சி ஆர்வத்தை அதிகப்படுத்தவும் 'கோடைகால ஃபெல்லோஷிப் 2020' என்ற பயிற்சியை சென்னை ஐஐடி வழங்கி வருகிறது.

இதற்கு ஐஐடி அல்லாத கல்லூரி மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசித் தேதி பிப்ரவரி 29,2020 ஆகும்.

இந்த ஃபெல்லோஷிப்பில் இரண்டு மாதம் பயிற்சி வழங்கப்படும். இதற்கு உதவித்தொகையாக ரூ.6,000 வழங்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஐஐடியில் 2020-ம் ஆண்டு மே 20 முதல் ஜூலை 19 வரை பயிற்சி வழங்கப்படும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோடைக்கால குறு-செயல்திட்டத்தைக் கற்றறிய (mini-project) பொறியியல், மேலாண்மை, அறிவியல் மற்றும் மானுடவியல் படிப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பாக,
* 3-ம் ஆண்டு பி.இ./ பி.டெக்./ பி.எஸ்சி. (பொறியியல்) மாணவர்கள்
* ஒருங்கிணைந்த எம்.இ./ எம்.டெக். 3 அல்லது 4-ம் ஆண்டு மாணவர்கள்
* முதலாமாண்டு எம்.இ./ எம்.டெக்./ எம்.எஸ்சி./எம்.ஏ. மாணவர்கள்
* எம்பிஏ மாணவர்கள்

படிப்பில் உயர் மதிப்பெண்கள் பெற்றுள்ள மேற்குறிப்பிட்ட மாணவர்கள் இந்த ஃபெல்லோஷிப்புக்கு விண்ணப்பிக்கலாம். பிற ஐஐடிக்களில் படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.

மாணவர்கள் படிக்கும்போது, கலந்துகொண்ட கருத்தரங்குகள், மேற்கொண்ட செயல்திட்டங்கள், போட்டிகள், இன்ன பிற விருதுகளைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.

எந்தெந்த பொறியியல் பிரிவுகள் விண்ணப்பிக்கலாம்?
* விண்வெளி பொறியியல்
* அப்ளைடு மெக்கானிக்ஸ்
* உயிரி தொழில்நுட்ப பொறியியல்
* வேதியியல் பொறியியல்
* சிவில் இன்ஜினீயரிங்
* கணினி அறிவியல் பொறியியல்
* வடிவமைப்பு பொறியியல்
* மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல்
* இயந்திரவியல் பொறியியல்
* உலோகவியல் பொறியியல்

எந்தெந்த அறிவியல் பிரிவுகள் விண்ணப்பிக்கலாம்?
* இயற்பியல்
* வேதியியல்
* கணிதம்

* மானுடவியல் மற்றும் சமூக அறிவியல்
* மேலாண்மைப் படிப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கு முன்னால், மாணவர்கள் கல்லூரி நிறுவனங்களில் நற்சான்றிதழ் பெற்று, கடிதத்தை இணைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: https://sfp.iitm.ac.in/contactus

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x