Published : 21 Jan 2020 10:34 AM
Last Updated : 21 Jan 2020 10:34 AM

ஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்? ஒருமை பன்மை குழப்பமா?

ஜி.எஸ்.எஸ்.

மணிமாறன் தன் பெற்றோர் மற்றும்அக்கா மேகலாவுடன் குற்றாலத்துக்கு சுற்றுலா சென்றான். அங்கே மணிமாறனுக்கும், மேகலாவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் இது.

Manimaran – This is a beautiful place. I like natures.

Mekala - Yes. The sceneries here are very good.

Manimaran – Waterfalls are fantastic.

Mekala - Let us walk in grass.

Manimaran – We will do that. Our foots will be pleasant when we do so.

மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசியுங்கள்.

மேற்படி உரையாடலிலுள்ள தவறுகளைப் பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.

மணிமாறன் natures என்று கூறுகிறார். அது தவறு. Nature என்றுதான் கூற வேண்டும்.

மேகலா sceneries என்ற சொல்லைப் பயன்படுத்துகிறாள். அது தவறு. Scene என்ற வார்த்தைக்குப் பன்மை உண்டு. அது scenes. ஆனால், scenery என்ற சொல்தான் ஒருமை, பன்மை ஆகிய இரண்டுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

Waterfalls என்பது ஒருமைதான்.அது அருவியைக் குறிக்கிறதே தவிர அருவிகளை அல்ல. (பன்மையை குறிக்க வேண்டுமென்றால் those two waterfalls என்பதுபோல் குறிப்பிட வேண்டும்). எனவே மணிமாறன் waterfalls is fantasticஎன்றுதான் கூறியிருக்க வேண்டும்.(Waterfalls என்று நம் நாட்டில் குறிப்பிடுகிறோம் என்றாலும் waterfall அல்லது falls என்றுதான் மேலைநாடுகளில் குறிப்பிடுகிறார்கள்).

Let us walk on grass என்பதே சரியானது. Foot என்றால் பாதம். அதன் பன்மைச் சொல் foots அல்ல, feet. எனவே மணிமாறன் our foots என்பதற்குப் பதில் our feet என்று கூறியிருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x