Published : 21 Jan 2020 08:03 AM
Last Updated : 21 Jan 2020 08:03 AM

ஆதார் திருத்த சான்று ஆவணத்துக்கு நிலையான படிவம்

ஆதார் பதிவு மற்றும் எண் உருவாக்கம், அட்டை விநியோகம் ஆகிய பணிகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் 7 கோடியே 43 லட்சம் பேர் ஆதார் எண் பெற்றுள்ளனர். சிலரது ஆதார் அட்டைகளில் பிறந்த தேதி தவறாக இடம்பெற்றுள்ளது. தொடக்கத்தில் ஆதார் பதிவு மேற்கொண்டபோது, பிறந்த தேதிக்கு அவ்வளவாக முக்கியத்துவம் தரப்படவில்லை. பிறந்த தேதி இல்லாமலேயே ஆதார் பதிவு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தற்போது பிறந்த தேதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் மூலமாக பான் கார்டு, பாஸ்போர்ட் பெற பிறந்த தேதி அவசியமாகிறது.

இந்நிலையில், ஆதாரில் தவறாக உள்ள பிறந்த தேதியை திருத்தவும் பிறந்த தேதியை புதிதாக சேர்க்கவும் 15 வகையான சான்றுகளில் ஏதேனும் ஒன்றை வழங்கலாம் என யுஐடிஏஐ நிறுவனம் அறிவித்துள்ளது. அதில் குருப் ஏ அதிகாரி (ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட அதிகாரிகள்) அளிக்கும் சான்றும் ஒன்று. ஆனால் அந்த சான்று தொடர்பாக குழப்பம் இருந்து வந்தது.

அதிகாரிகளும் அவரவருக்கு தெரிந்த வகையில் பிறந்த தேதியைஉறுதி செய்யும் சான்றுகளை வழங்கி வந்தனர். இந்நிலையில், அதற்கான நிலையானபடிவத்தை யுஐடிஏஐ வெளியிட்டுள்ளது. அதை, https://uidai.gov.in/images/commdoc/valid_documents_list.pdf என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அந்த படிவத்தை பூர்த்தி செய்து, சான்றாக வழங்கலாம் என்றும் யுஐடிஏஐ அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x