Published : 20 Jan 2020 12:22 PM
Last Updated : 20 Jan 2020 12:22 PM

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கையில் சந்தேகம் இல்லை: ரஷ்ய தூதர் நிகோலே விளக்கம்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு வழங் கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு - காஷ்மீர், லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதனால் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்
கைகள் மேற்கொண்டது.

காஷ்மீர் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் மற்றும் சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, ஐ.நாவில் புகார் அளித்து வந்தது. எனினும், அதை உலக நாடுகள் ஏற்க மறுத்துவிட்டன. இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கையில் எந்த சந்தேகமும் இல்லை என்று ரஷ்ய தூதர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலே குடாஷேவ் பேசியதாவது:

ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்ப சீனா முயற்சி செய்து வருகிறது. சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனத்தின் அடிப்படையில், காஷ்மீர் விவகாரம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இருக்கும் விஷயம்.

இதில் இந்தியாவின் அணுகுமுறை குறித்து ரஷ்யாவுக்கு எந்த சந்தேகமும் இல்லை. காஷ்மீர் விஷயத்தில் இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கையில் சந்தேகம் உள்ளவர்கள் அங்கு சென்று பார்வையிடலாம்.

இந்தியாவுக்கு எஸ் -400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ரஷ்யா வழங்க உள்ளது. எஸ்- 400 ஏவுகணையானது எஸ் -300 ஏவுகணையின் மேம்பட்ட வடிவமாகும். இது ரஷ்யாவிடம் மட்டுமே உள்ளது. இந்தியாவுக்கு வழங்கவுள்ள அனைத்து எஸ் -400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளும் வரும் 2025-ம் ஆண்டுக்குள் வழங்கப்படும். இவ்வாறு நிகோலே பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x