Published : 20 Jan 2020 11:06 AM
Last Updated : 20 Jan 2020 11:06 AM

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புத் தேர்வுகள்: ஹால் டிக்கெட்டுகள் வெளியீடு

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகள் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியாகி உள்ளன.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளன.

10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 26-ம் தேதி தொடங்கி மார்ச் 18-ம் தேதி முடிகின்றன. 12-ம் வகுப்புக்கான தேர்வுகள் பிப்.22 தொடங்கி மார்ச் 30-ம் தேதி முடிவடைகின்றன. அந்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் ஜனவரி இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று ஏற்கெனவே சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று (ஜன. 19) பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் cbse.nic.in என்ற இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன. அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளைத் தரவிறக்கம் செய்து தர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் மூலம் தேர்வெழுதும் மாணவர்களுக்கு, சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலம் ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படும். இது தவிர தனித் தேர்வர்களாகப் பதிவு செய்துள்ள மாணவர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை சிபிஎஸ்இ இணையதளத்தில் இருந்து தாங்களே நேரடியாகத் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

ஹால் டிக்கெட்டைப் பெறுவதற்கான இணைப்பு: http://cbse.nic.in/newsite/index.html

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x