Published : 20 Jan 2020 08:06 AM
Last Updated : 20 Jan 2020 08:06 AM

ராமேசுவரம் அருகே அரசு தொடக்க பள்ளியில் ஊர்மக்கள் ஒன்றுகூடி கொண்டாடிய பொங்கல் விழா

ராமேசுவரம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஊர்மக்கள் ஒன்று கூடி பொங்கல் விழாவை கொண்டாடினர். கடலாடி ஒன்றியம் நரசிங்கக் கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 22 குழந்தைகள் படிக்கிறார்கள். இப்பள்ளியில் பொங்கல் தினத்தில் பொங்கல்விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடலாடி வட்டாரக் கல்வி அலுவலர் புல்லாணி பொங்கல் விழாவுக்கு தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன் வரவேற்றார்.

கடலாடி வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர்கள் கோவிந்தராஜ், தனசேகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். மாணவர்கள் பொங்கல் வைப்பதற்குத் தேவையான வெண்கலப் பானை, கரண்டி, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பருப்பு, நெய், கரும்பு கொண்டுவந்தனர். மாணவிகள் கோல
மிட்டு பொங்கல் வைத்தனர். கரும்புகளை முக்கோணவடிவில் அமைத்து அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து கும்மியடித்து சுற்றி வந்து பாரதியார் பாடலை பாடி மகிழ்ந்தனர்.

ஓட்டம், வண்ணப் பந்து எடுத்தல், டப்பாவுக்குள் பந்து வீசுதல், முகத்தில் பொட்டு ஒட்டுதல், நீர் உறிஞ்சி வெளியேற்றுதல், கண்ணைக் கட்டிக் கொண்டு பின்னால் ஓடுதல் போன்ற போட்டிகளும், தாய்மார்களுக்கு அதிர்ஷ்ட கட்டம் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பொங்கல் விழா ஏற்பாடுகளை பள்ளியின் இடைநிலை ஆசிரியர் அய்யப்பன் செய்திருந்தார்.கடலாடி ஒன்றியம் நரசிங்கக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x