Published : 18 Jan 2020 04:38 PM
Last Updated : 18 Jan 2020 04:38 PM

'திறன் இந்தியா' திட்டத்தின் கீழ் இலவசச் சான்றிதழ் படிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

'திறன் இந்தியா' திட்டத்தின் கீழ் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், 'பசுமைத் திறன் வளர்ச்சித் திட்டத்தை' அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, 'பறவைகள் கணக்கெடுப்பு மற்றும் அடிப்படை பறவையியல்' எனும் சான்றிதழ் படிப்பு மத்திய அரசால் கற்பிக்கப்படுகிறது.

இந்தப் படிப்பில் 15 நாட்கள் பயிற்சி வழங்கப்படும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 12-ம் வகுப்பை முடித்தவர்கள் அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் இந்தப் படிப்புக்குத் தகுதியானவர்கள்.

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். ஸ்கைப், போன் அல்லது நேரடியாகத் தேர்வு இருக்கும். இதில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கு அனைத்துச் செலவுகளும் இலவசம்.

படிப்பு, செய்முறை, ஆய்வகப் பயிற்சிகள், ப்ராஜெக்ட், களப்பயணம் ஆகியவை இப்படிப்பில் அடங்கும். தங்குவது, ரயில் பயணச் செலவு உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகின்றன.

டேராடூனில் ஜனவரி 30-ம் தேதி இந்தப் படிப்பு தொடங்குகிறது. இதற்கு விண்ணப்பிக்கக் கடைசித் தேதி ஜன.21-ம் தேதி நண்பகல் 12 மணி.

மேலும் விவரங்களுக்கு: 8800164752

எப்படி விண்ணப்பிப்பது?

http://www.wiienvis.nic.in/ViewEvents.aspx?Id=10775&Year=2020 என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x