Published : 18 Jan 2020 03:44 PM
Last Updated : 18 Jan 2020 03:44 PM

குழந்தைகள் வரையும் ஓவியங்கள் மூலம் பாடல் பாடும் செயலி!

குழந்தைகள் வரையும் ஓவியங்கள் மூலம் பாடல் பாடும் செயலி ஒன்று புத்தகக் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக குழந்தைகள் இருக்கும் வீடுகளின் சுவர்கள், குழந்தைகளின் கைவண்ணத்தால் நிரம்பி இருக்கும். சுவர்களில் குழந்தைகள் கிறுக்காமல் பாதுகாப்பதே பெற்றோரின் முக்கிய வேலையாகவும் இருக்கும்.

இதைச் சரி செய்யும் வகையில் சுவரில் ஒட்டிக்கொள்ளக் கூடிய ஓவியத் தாள்கள் புத்தகக் காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் செவ்வக வடிவிலான வெண்ணிறத் தாள்களில் விலங்குகள், பொம்மைகள், மரங்கள், மனிதர்கள் என ஏராளமான உருவங்கள் வரையப்பட்டுள்ளன.

அவற்றில் சிறுவர், சிறுமியர் எத்தனை முறை வேண்டுமானாலும் வண்ணம் தீட்டலாம். அதை அழித்து, அழித்து மீண்டும் பயன்படுத்தலாம். க்ரேயான், வாட்டர் கலர், ஸ்கெட்ச், பென்சில் என்று எதில் வண்ணங்களைத் தீட்டினாலும், அழித்துப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.

இந்தக் காகிதத்தில் எந்தப் படம் வரைந்தாலும் இங்க்மியோ (InkMeo) என்ற செயலி மூலம் பாடல்கள் ஒலிக்கும். இதற்கு சம்பந்தப்பட்ட செயலியைத் தரவிறக்கம் செய்து, கேமராவை ஆன் செய்து படத்தின் அருகில் காண்பித்தால் போதும். அது தொடர்பான குழந்தைகள் பாடல் ஒலிக்கிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி என 3 மொழிகளில் பாடல்கள் ஒலிக்கின்றன.

சுவரையும் பாதுகாத்துப் பாடல்கள் பாடும் இந்தக் காகிதங்கள் 100 ரூபாயில் இருந்து 350 ரூபாய் வரை விற்பனை ஆகின்றன. இந்த ஓவியத் தாள்கள் குழந்தைகளின் அறிவாற்றலை அதிகரிப்பதாக பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x