Published : 16 Jan 2020 02:08 PM
Last Updated : 16 Jan 2020 02:08 PM

நீட் தேர்வு விண்ணப்பம்: பிழைத் திருத்தம் செய்ய முடியாததால் தேர்வர்கள் அதிர்ச்சி

நீட் தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தில் பிழைத் திருத்தம் செய்ய முடியாததால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பொது மருத்துவம், பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (நீட்) அடுத்த ஆண்டு மே 3-ம் தேதி நடைபெறுகிறது.

நாடு முழுவதும் 'நீட்' தேர்வு எழுத 15 லட்சத்து 93 ஆயிரத்து 452 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 17 ஆயிரத்து 502 பேர் விண்ணப்பித்து, தேர்வெழுத உள்ளனர்.

தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் ஓஎம்ஆர் முறையில் தேர்வு நடைபெற உள்ளது. மே 3, 2020-ல் மதியம் 2 மணி முதல் 5 மணிவரை 3 மணி நேரம் தேர்வு நடைபெறுகிறது. இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடிந்த நிலையில், அவற்றில் திருத்தம் செய்ய ஜன.15 முதல் 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இரண்டு நாட்களாக, பிழைத் திருத்தம் செய்யும் சாளரம் (Window) செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிழைத் திருத்தம் மேற்கொள்ள விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மார்ச் 27, 2020-ல் நீட் தேர்வு எழுதுவதற்கான அனுமதிச் சீட்டு இணையதளத்தில் வெளியாகிறது. தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 4-ம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x