Published : 13 Jan 2020 12:07 PM
Last Updated : 13 Jan 2020 12:07 PM

குற்ற சம்பவங்களில் டெல்லி முதலிடம்: சென்னைக்கு 3-வது இடம்

இந்தியாவிலே 2018-ம் ஆண்டில் அதிகமான குற்ற சம்பவங்கள் டெல்லியில் நடத்துள்ளதாகவும், சென்னை 3-வது இடத்தில் உள்ளதாகவும் தேசிய குற்ற ஆவணக் காப்பத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மாநிலங்களில் நடக்கும் குற்ற சம்பவங்கள் மூலம் பதிவாகும் வழக்குகளின் விவரங்களை மாநில குற்ற ஆவண காப்பகம் பதிவுச் செய்யும். மாநில காப்பகத்தில் இருக்கும் புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்சிஆர்பி) பெற்று, மொத்த புள்ளிவிவரங்களாக ஆண்டுத்தோறும் வெளியிடும்.

அந்த வகையில் 2018-ம் ஆண்டுக்கான குற்ற புள்ளிவிவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டிலேயே மிக அதிகமாக தலைநகர் டெல்லியில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 977 குற்ற சம்பவங்கள் நடந்தது தெரிய வந்துள்ளது. அதில், 1,215 பாலியல் வன்கொடுமை வழக்குகளும், 12,445 வன்முறை தொடர்பான வழக்குகளும் பதிவாகியுள்ளன.

மேலும், 6,063 ஆள் கடத்தல் வழக்குகளும், 2,444 கொள்ளை வழக்குகளும், 126 கலவர வழக்குகளும், 513 கொலை வழக்குகளும், 529 கொலை முயற்சி வழக்குகளும் பதிவாகியுள்ளன.

டெல்லிக்கு அடுத்தபடியாக மும்பையில் 2018-ம் ஆண்டு 40,757 குற்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த வரிசையில் 20,160 குற்ற சம்பவங்கள் நடந்து, சென்னை 3-வது இடத்தில் உள்ளது. மேலும், 19,682 சம்பவங்கள் மூலம் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா 4-வது இடத்தில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x