Published : 13 Jan 2020 10:38 AM
Last Updated : 13 Jan 2020 10:38 AM

அறிவியல் இயக்கம் சார்பில் சிவகங்கையில் குழந்தைகள் புத்தக திருவிழா

சிவகங்கை

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சிவகங்கையில் மதுரை சாலையில் உள்ள வியான்னி மகாலில் குழந்தைகள் புத்தகத் திருவிழா 9-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி (நேற்று) வரை 4 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த புத்தக திருவிழாவை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தொடங்கி வைத்தார். கோளரங்கத்தை முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்துவும், புத்தகப் பேரணியை மாவட்டக் கல்வி அலுவலர் அமுதாவும் தொடங்கி வைத்தனர்.

தொடக்க விழாவில், அறிவியல் இயக்க நிர்வாகிகள் சாஸ்தா சுந்தரம், காளிராசா, பிரபாகர், சங்கரலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த புத்தக
திருவிழாவில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் 25,000 புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன.

மேலும் புத்தகம், வாங்கியவர்களுக்கு எழுத்தாளர் அ.ஈஸ்வரன் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினார். தினமும் காலை 9 முதல் இரவு 9 மணி வரை நடைபெற்ற இந்த புத்தக திருவிழாவை பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மட்டு மின்றி பெற்றோர்களும் ஆர்வத்தோடு வந்து பார்வையிட்டனர். தங்களுக்குப் பிடித்தமான புத்தகங்களையும் அவர்கள் வாங்கிச்சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x