Published : 13 Jan 2020 07:59 AM
Last Updated : 13 Jan 2020 07:59 AM

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னையில் 23-ம் தேதி விநாடி - வினா போட்டி: பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளலாம்

கோப்புப்படம்

சென்னை

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தேசிய வாக்காளர் தின கொண்டாட்டம், சென்னை கலைவாணர் அரங்கில் வரும் ஜன.25-ம் தேதி நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விநாடி -வினா நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் ஜன.23-ம் தேதி பகல் 12 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில், 9-ம் வகுப்பு முதல் கல்லூரி இளநிலை பட்டம் பயிலும் மாணவர்கள் வரை பங்கேற்கலாம்.

ஆர்வமுள்ள மாணவர்கள் தங்களின் பெயர், பயிலும் கல்வி நிறுவனத்தின் பெயர், பயிலும் வகுப்பு மற்றும் கைபேசி எண் ஆகிய தகவல்களை ‘goalquiz@gmail.com’ என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில், 2 உறுப்பினர்களைக் கொண்ட 200 அணிகள் உருவாக்கப்படும். முதலில் பதிவு செய்யும் 200 அணிகள் மட்டுமே போட்டியில் பங்கேற்க இயலும். இதுகுறித்த சந்தேகங்களுக்கு 9840927442 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இதற்கு பதிவு செய்வதற்கான காலக்கெடு ஜன.20-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

மாணவர்கள் தங்கள் பெயர்களை மின்னஞ்சல் முகவரியில் மட்டுமே பதிவு செய்ய இயலும். தேர்தல் மற்றும் பொது அறிவு சார்ந்து விநாடி - வினா போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு கல்வி நிறுவனமும் பல அணிகளை அனுப்பலாம். ஆனால், ஓர் அணி 2 மாணவர்களை கொண்டதாக மட்டுமே இருக்க வேண்டும். முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.30 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x