Last Updated : 10 Jan, 2020 12:35 PM

 

Published : 10 Jan 2020 12:35 PM
Last Updated : 10 Jan 2020 12:35 PM

ஒவ்வொரு தாய்க்கும் ரூ.15,000: குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப 'தாய்மடி' திட்டத்தைத் தொடங்கினார் ஜெகன்மோகன் ரெட்டி

குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் ரூ.15,000 வழங்கும் 'தாய்மடி' (அம்மா வொடி) திட்டத்தை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

'ஜகனண்ணா அம்மா வொடி' என்னும் இந்தத் திட்டம், பிவிகேஎஸ் கல்லூரியில் வியாழக்கிழமை அன்று தொடங்கப்பட்டது. ஆந்திரா முழுவதும் உள்ள, 43 லட்சம் தாய்மார்களுக்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

இதன்படி, ஒவ்வோர் ஆண்டும் தனது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு ரூ.15,000 வழங்கப்படும். ஆண்டுதோறும் ஜனவரி மாதம், சம்பந்தப்பட்டவரின் வங்கிக் கணக்குக்கு நேரடியாகப் பணம் அனுப்பப்படும். மாணவர்கள் 12-ம் வகுப்பை முடிக்கும் வரை இந்த நிதியுதவி வழங்கப்படும்.

அரசு ஊழியர்களுக்கும் வரி செலுத்துபவர்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தாது. அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள், உடனுறைப் பள்ளிகள் மற்றும் ஜூனியர் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இந்தத் திட்டத்துக்குத் தகுதியானவர்கள்.

2019-2020 கல்வியாண்டில் ஆந்திர அரசு ரூ.6,455 கோடியை இத்திட்டத்துக்காக ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் இந்தக் கல்வியாண்டில் சுமார் 30 சதவீதம் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

தன்னார்வ நிறுவனங்களுக்கும் நிதி உண்டு
அதேபோல ஆதரவற்றோர், தெருவோரக் குழந்தைகளைப் பராமரித்து, பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உரிய விசாரணை மற்றும் தகவல் சரிபார்ப்புக்குப் பிறகு நிதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x