Published : 10 Jan 2020 11:47 AM
Last Updated : 10 Jan 2020 11:47 AM

ஆக்லாந்து கிளாசிக் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் வெற்றி

ஆக்லாந்து கிளாசிக் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றுப் போட்டியில், அமெரிக்க வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

ஆக்லாந்து கிளாசிக் டென்னிஸ் போட்டிகள் ஆக்லாந்து நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது சுற்றுப் போட்டியில், அமெரிக்க வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், சக நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானா மெக்ஹேலை எதிர்த்து ஆடினார்.

இப்போட்டியில் முதல் செட்டை 3-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த செரீனா வில்லியம்ஸ், அடுத்த 2 செட்களையும் 6-2, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் வென்று கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதிச் சுற்றில் ஜெர்மனியின் லாரா சிகமெண்டை எதிர்த்து அவர் ஆடவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x