Published : 10 Jan 2020 08:45 AM
Last Updated : 10 Jan 2020 08:45 AM

பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும் கருத்து சொல்லுங்கள் மாணவர்களே... பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

‘‘இந்திய பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது என்ற குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், 2020 - 2021-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

மத்திய பட்ஜெட் 130 கோடி இந்தியர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஒன்று. இந்தியாவின் வளர்ச்சிக்கு பாதை வகுக்கும் பட்ஜெட். எனவே இந்த ஆண்டு பட்ஜெட்டுக்கு நாட்டு மக்கள் உங்கள் கருத்துகளை, யோசனைகளை தெரிவிக்கலாம். கருத்துகளை https://www.mygov.in என்ற அரசு இணையதளத்தில் பதிவு செய்யலாம் இவ்வாறு ட்விட்டரில் மோடி கூறியுள்ளார்.

எனவே, கல்வித் துறையில் உள்ளவர்கள், மாணவர்களும் தங்கள் கருத்துகளை இதில் பதிவு செய்யலாம். கணினிகளை எளிதாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் பெரிய வேலையாக இருக்கிறது. பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும். அதன்மூலம் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நேரடியாக மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தலாம்.

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5 சதவிகிதமாகக் குறையும் என மத்திய புள்ளியியல் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்நிலையில், பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான கருத்துகள், யோசனைகளை தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக மத்திய பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்னர் முன்னணி தொழிலதிபர்கள், வர்த்தக நிபுணர்களுடன் நிதியமைச்சர் ஆலோசனை நடத்தி கருத்துகள் பெறுவார். அதன்பின் பிரதமரின் ஆய்வுக்குப் பிறகு, அவர்கள் சொல்லும் நல்ல கருத்துகள் பட்ஜெட்டில் எதிரொலிக்கும்.

இந்த முறை பட்ஜெட் தயாரிக்கும் பணியில் பிரதமர் மோடி நேரடியாக கவனம் செலுத்த உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பொதுமக்கள் தெரிவிக்கும் நல்ல கருத்துகள் பட்ஜெட்டில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x