Published : 10 Jan 2020 08:36 AM
Last Updated : 10 Jan 2020 08:36 AM

இன்று ஓநாய் சந்திர கிரகணம்

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று இரவு நிகழ்கிறது. அதிசயங்களும், மர்மங்களும் கொட்டிக் கிடக்கும் இடம் விண்வெளி. இங்கு நடைபெறும் சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் மனிதர்களுடைய வாழ்வுடன் தொடர்புடையவையாக கருதப்படுகின்றன.

இந்நிலையில், 2020-ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது. இதற்கு ‘ஓநாய் சந்திர கிரகணம்’ (Wolf Moon Eclips)' என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா பெயரைச் சூட்டியுள்ளது.

சந்திர கிரகணம் என்பது நிலவுக்கும் சூரியனுக்கும் இடையே பூமி கடந்து செல்லும் போது ( நிலவு - பூமி - சூரியன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நேரம்) நடக்கும் ஒரு அரிய நிகழ்வு. அப்போது பூமியில் விழும் சூரியனின் ஒளி சிறிது நேரத்துக்கு மங்கிக் காணப்படும்.

மேலும் கிரகணம் உச்சத்தில் இருக்கும் போது 90 சதவிகித நிலவு பூமியால் மறைக்கப்படும். இந்த நிகழ்வால் நிலவின் ஒளி மங்கும்.

இந்த சந்திர கிரகணத்தை ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் பார்க்கலாம் என்று நாசா அறிவித்துள்ளது. இந்த ஆண்டு நிகழவிருக்கும் 4 சந்திர கிரகணங்களில் இது முதலாவது.

இதன்பிறகு ஜூன் 5, ஜூலை 5 மற்றும் நவம்பர் 30 ஆகிய தேதிகளில் சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணி 37 நிமிடங்களுக்கு சந்திர கிரகணம் தொடங்கி நாளை 11ம் தேதி காலை 2 மணி 42 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவிலும் இந்த கிரகணத்தைப் பார்க்கலாம்.

இந்த சந்திர கிரகணம் பற்றி தமிழ்ப் பஞ்சாங்கங்களில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதால் இந்தியாவில் குறிப்பாக தென்இந்தியாவில் இந்த கிரகணம் தெரியாது என்றும் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x