Published : 09 Jan 2020 12:11 PM
Last Updated : 09 Jan 2020 12:11 PM

கடலோரக் காவல் படை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு ஓவிய போட்டி

ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற பள்ளிக் குழந்தைகளுடன் கடலோர காவல்படை அதிகாரிகள்.

சென்னை

இந்திய கடலோரக் காவல் படையின் 44-வது நிறுவன தினத்தை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி சென்னை மீனம்பாக்கத்தில் செவ்வாய்க்கிழமை நடந்தது. கடலோரக் காவல் படை மனைவியர் நலச் சங்கம் இணைந்து நடத்திய இப்போட்டியில், சென்னை நகரின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 450-க்கும் அதிகமான குழந்தைகள் பங்கேற்றனர்.

பரிசுக்கான மிகச் சிறந்த ஓவியம் மற்றும் படங்களை ஏ.எம். ஜெயின் கல்லூரி பேராசிரியர் திரு.செல்லப்பா, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி பேராசிரியை மீனாட்சி மதன் ஆகியோர் தேர்வு செய்தனர். ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான பிரிவில் சென்னை எம்.எம்.எச்.எஸ் பள்ளி 4-ம் வகுப்பு மாணவர் டி.அமல் முதல் பரிசை வென்றார்.

6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பிரிவில் சென்னை மான்ட் ஃபோர்ட் பள்ளி 7-ம் வகுப்பு மாணவி ஆர்.சாயாலி ஏ. குயின் முதல் பரிசை வென்றார். 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பிரிவில் சென்னை மான்ட் ஃபோர்ட் பள்ளி 10-ம் வகுப்பு மாணவி சி.ஜே.ஷாபிக்னி கிளாரா ஜாய்க்கு முதல் பரிசு கிடைத்தது.

போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவியருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், அனைத்து குழந்தைகளுக்கும் கடலோரக் காவல் படையின் டார்னியர் விமானத்தையும், சேடாக் விமானத்தையும் பார்க்க வாய்ப்பளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x