Published : 09 Jan 2020 11:39 AM
Last Updated : 09 Jan 2020 11:39 AM

கால்நடை வளர்ப்புத் துறை இந்தியாவில் முன்னேற்றம் அமெரிக்க தூதரகம் அறிக்கை

வாஷிங்டன்

கால்நடை வளர்ப்புத் துறையில் கடந்த ஆண்டை விட இந்தியா நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாக அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் வேளாண்மைத் துறை அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

கால்நடை வளர்ப்பில் உள்ள இறக்குமதி விதிமுறைகளை இந்தியா எளிதாக்கியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் கால்நடை வளர்ப்புத் துறை கடந்த ஆண்டை விட குறிப்பிடத்தக்க மாற்றத்தை அடைந்துள்ளது. கால் நடை வளர்ப்பு, பால் வளம் மற்றும் மீன் வளத்துக்காக தனி அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சகங்கள் உணவு மற்றும் விவசாய பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு வழி காட்டியாக செயல்படுகின்றன.

2019-ம் ஆண்டு, மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் இந்திய கால்நடை வளர்ப்புத்துறை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x