Published : 09 Jan 2020 07:38 AM
Last Updated : 09 Jan 2020 07:38 AM

குழந்தைகள் நூல் விருது பெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர்

இந்திய வம்சாவளி எழுத்தாளரான ஜஸ்பிந்தர் பிலான் தனது முதல் நாவலுக்காக ஐக்கிய ராஜ்ஜியத்தின் (யு.கே) குழந்தைகள் நூல் விருதை வென்றுள்ளார். இந்த நாவல் இமயமலை எல்லைப் பகுதியில் இவரது பாட்டியுடன் இருந்த நினைவுகளையும் அதன் உறவுகளையும் குறித்து பேசுகிறது. இவர் சிறுவயதாக இருந்த போது குடும்பத்துடன் இங்கிலாந்தில் உள்ள நோட்டிங்கம் நகரத்துக்கு குடுமத்துடன் புலம்பெயர்ந்துவிட்டனர்.

இந்த விருது பெற்றுள்ள இவரது 'Asha and the Spirit Bird' என்ற நாவல் ஒன்பது வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களை நோக்கமாக கொண்டு எழுதப்பட்டது. இதில் இறுதியாக மூன்று நூல்கள் பட்டியலிடப்பட்டு, பின் 2019-ம் ஆண்டுக்கான கோஸ்டா சில்ரன்ஸ் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிலான் இந்த விருதுடன் பரிசு தொகையாக ரூ.4,69,900 பெறுகிறார்.

இதுகுறித்து எழுத்தாளர் பிலான் கூறுகையில், “ஒரு பெண்ணாக நான் எப்போதும் எழுதுவதை விரும்புகிறேன். உண்மையில், எப்போது கதைகள் எழுத முடியாத நாளை என்னால் நினைவுபடுத்த முடியவில்லை. ஆனால் ஒருபோதும் நான் கதை எழுதுவேன் அது பிரசுரமாகும் என்று நினைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும், “குடும்பத்துடன் நான் இந்தியாவில் இமயமலைக்கு நெருக்கமாக இருக்கும் எங்கள் தோட்டத்தில் பிறந்தேன். நாங்கள் குடும்பத்துடன் தோட்டத்தில் வசித்தேன்” என்ற நினைவுகளையும் பகிர்ந்துள்ளார் பிலான்.

மிக அழகிய நூல்

இந்த நூலை தேர்வு செய்த மூன்று உறுப்பினர்கள் கொண்ட நடுவர் குழு இது மிக அழகிய நூல் எங்கள் மனம் கொள்ளை போனது என்று தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நாவலில் வரும் 11 வயதுடைய ஆஷா இவரது பாட்டியுடனான ஆன்மீகத் தொடர்பும், இவரது நெருங்கிய நண்பர் ஜீவனுடனான இமயமலைப் பயணம் பற்றிய கதையாக உள்ளது.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x