Published : 08 Jan 2020 12:02 pm

Updated : 08 Jan 2020 12:02 pm

 

Published : 08 Jan 2020 12:02 PM
Last Updated : 08 Jan 2020 12:02 PM

செய்திகள் சில வரிகளில்: டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக குறைக்க சச்சின் டெண்டுல்கர் எதிர்ப்பு

sachin-tendulkar-protest
கோப்புப்படம்

புதுடெல்லி

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை 5 நாட்களுக்கு பதிலாக 4 நாட்களில் நடத்தி முடிக்கும் புதிய யோசனையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முன்வைத்துள்ளது. இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களில் நடத்தி முடிக்கும் யோசனைக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள சச்சின் டெண்டுல்கர், “கிரிக்கெட் விளையாட்டை நேசிப்பவன் என்ற வகையில், டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களுக்குள் சுருக்கும் யோசனையை நான் ஏற்க மாட்டேன். இதுவரை நடத்தப்பட்டு வந்த முறையிலேயே இனியும் டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து நடத்த வேண்டும். சுழற்பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை கடைசி 3 நாட்களில்தான் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியும்.

இப்போது டெஸ்ட் போட்டிகளின் நாட்களை குறைப்பதால் அவர்களின் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான நாட்கள் குறையும். அத்துடன் குறைந்த நாட்களே இருப்பதால் பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் போட்டியை அணுகும் முறையிலும் மாற்றம் ஏற்படும். எனவே இந்த யோசனையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் கைவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஆக்லாந்து கிளாசிக் டென்னிஸ் போட்டி செரினா வில்லியம்ஸ் வெற்றி

ஆக்லாந்து

கோப்புப்படம்

ஆக்லாந்து நகரில், ஆக்லாந்து டபிள்யூடிஏ கிளாசிக் டென்னிஸ் போட்டிகள் நடது வருகிறது. இதில் நேற்று நடந்து முதல் சுற்றுப் போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், இத்தாலிய வீராங்கனையான கமீலா கியார்கியை எதிர்த்து ஆடினார். இப்போட்டியில் செரீனா வில்லியம்ஸ், 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். இதன்மூலம் 38 வயதான செரீனா வில்லியம்ஸ், இந்த ஆண்டில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

செய்திகள் சில வரிகளில்டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்4 நாட்கள்சச்சின் டெண்டுல்கர்எதிர்ப்புSachin Tendulkarஆக்லாந்து கிளாசிக் டென்னிஸ்செரினா வில்லியம்ஸ்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author