Published : 08 Jan 2020 11:56 AM
Last Updated : 08 Jan 2020 11:56 AM

மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் லக்‌ஷயா சென் தோல்வி

மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் நகரில் மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இப்போட்டியின் தகுதிச்சுற்று ஆட்டத்தில், நேற்று இந்திய வீரரான லக்‌ஷயா சென், டென்மார்க்கின் ஹான்ஸ்-கிரிஸ்டியானை எதிர்த்து ஆடினார்.

இப்போட்டியில் லக்‌ஷயா சென், 21-11 18-21 14-21 என்ற புள்ளிக்கணக்கில் போராடி வீழ்ந்தார். இப்போட்டி 49 நிமிடங்கள் நீடித்தது.

இதில் தோற்றதன் மூலம் மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியின் முக்கிய சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பை லக்‌ஷயா சென் இழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x