Published : 08 Jan 2020 10:01 AM
Last Updated : 08 Jan 2020 10:01 AM

செய்திகள் சில வரிகளில்: யோகாவை பரப்பிய 30 ஊடகங்களுக்கு மத்திய அரசு விருது

கோப்புப்படம்

புதுடெல்லி

உடல் மற்றும் மனநலத்தை பேணும் நோக்கில் யோகா பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்த 30 ஊடக நிறுவனங்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி உள்ளது.

மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விருதுகளை வழங்கினார். இதில் 3 பிரிவின் கீழ் ‘அந்தராஷ்ட்ரியா யோகா திவாஸ் மீடியா சம்மன்’ எனும் விருது வழங்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜவடேகர் கூறுகையில், “இந்த நிகழ்வானது ஊடக நிறுவனங்களுக்கு ஒரு புதுவிதமான அங்கீகாரமாக இருக்கும். இது செய்தி, விளம்பரங்களுக்கு அப்பாற்பட்டு சமூகம் பயன்பெறுவதற்கான பெரும் பணியாக இருக்கும். மேலும் ஊடகங்கள் பொதுவெளியில் சிறந்த உடல்நலம், கல்வி குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்தியா ஒரு முதிர்ச்சி அடைந்த ஜனநாயக நாடாக இருக்க வேண்டும்” என்றார்.

- பிடிஐ

மேற்கு வங்கத்தில் பறவை திருவிழா தொடங்கியது

ஜல்பைகுரி

மேற்கு வங்க மாநிலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘புக்ஸா பறவைத் திருவிழா’ 4-ம் ஆண்டாக அலிபுர்துவார் மாவட்டத்தில் தொடங்கி உள்ளது.

இதுகுறித்து வடக்கு மேற்கு வங்கத்தை சேர்ந்த தலைமை வனப் பாதுகாவலர் உஜ்வால் கோஷ் கூறும்போது, ‘‘நான்கு நாட்கள் நடைபெறும் 2020-ம் ஆண்டின் பறவைத் திருவிழா திங்கட்கிழமை தொடங்கியது. இதை காண்பதற்கு உலகம் முழுவதும் இருந்து 50 பறவை ஆர்வலர்கள் பதிவு செய்துள்ளனர்.

இந்த காலகட்டத்தில் தான் இருவாட்சி, சுல்தான் டிட், கழுகு உட்பட 300-க்கும் அதிகமான அரிய வகை பறவைகள் இங்கு வரும்” என்றார். இங்கு குளிர் பகுதிகளில் இருந்து புலம்பெயர்ந்து வரும் பறவைகளை காணவும் புகைப்படம் எடுக்கவும் ஏராளமான பறவை ஆர்வலர்கள் ஆர்வத்துடன் வந்துள்ளனர்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x