Published : 07 Jan 2020 05:30 PM
Last Updated : 07 Jan 2020 05:30 PM

நாட்டுக்கே உதாரணமான அரசுப் பள்ளி; நிதி ஆயோக் பாராட்டு

ஜார்க்கண்ட் அரசு நடுநிலைப் பள்ளி தூய்மையில் நாட்டுக்கே உதாரணமாக இருப்பதாக நிதி ஆயோக் பாராட்டு தெரிவித்துள்ளது.

ஜார்க்கண்டின் பலாமு மாவட்டத்தில் துல்சுல்மா நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்குள்ள கட்டிடங்கள், அறைகள் என அனைத்துப் பகுதிகளும் படு சுத்தத்துடன் விளங்குகின்றன. கட்டமைப்பு, ஆரோக்கியத்துக்கான விஷயங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து நிதி ஆயோக் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''முன்னுதாரண மாவட்டத்தில் சுத்தமான குடிநீர், சுத்திகரிப்பு, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுடன் பள்ளி உள்ளது.

சுத்தம் மற்றும் ஆரோக்கியம்... இந்தப் பள்ளி பின்பற்றும் வழிமுறை மிகவும் சிறப்பாக இருக்கிறது. இது மாபெரும் இயக்கமாக வருங்காலத்தில் மாறவேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மையான குழாய்கள், நூலகம், மின்சார வசதி, பசுமை சூழல் ஆகிய வசதிகள் இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை அனைத்துக்கும் பின்னால் பள்ளி தலைமை ஆசிரியை அனிதா பெங்கரா உள்ளார். சுமார் 15 ஆண்டுகளாக அந்த பள்ளியில் பணிபுரிபவர் தனியார் பள்ளியை விட, வசதிகளை மேம்படுத்தி உள்ளார். உடல்நலம், தூய்மை ஆகிய இரண்டுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், மாணவர்களின் உதவியுடன் இவற்றை மேற்கொண்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் ஏராளமான பள்ளிகள் தவித்துவரும் சூழலில் துல்சுல்மா பள்ளி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x