Published : 07 Jan 2020 10:14 AM
Last Updated : 07 Jan 2020 10:14 AM

குட்டிகளுக்காக தாய் புலி கொலையா? வனத்துறை அதிகாரிகள் விசாரணை

கோவா வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண் புலி குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். கோவா யூனியன் பிரதேசத்தில் உள்ள சத்தாரி தாலுகாவில் அமைந்துள்ளது மகாதாய் வனவிலங்கு சரணாலயம். இந்த சரணாலயத்தில் புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 5-ம் தேதி அன்று ஹேன்-டோங்குர்லி கிராமம் அருகே 5 நாட்களுக்கு முன் இறந்த பெண் புலியின் சடலம் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது. சமீபத்தில் புலிகள் கணக்கெடுப்பின்போது, இறந்த பெண் புலிக்கு குட்டிகள் இருப்பது தெரிந்தது. இதனால், குட்டிகளுக்காக தாய் புலி கொலைச் செய்யப்பட்டதா என்ற கோணத்தில் வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அமெரிக்க வாழ் சீனர்களுக்கு சீன தூதரகம் எச்சரிக்கை

பெய்ஜிங்

இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி 3-ம் தேதி கொல்லப்பட்டார். இதனால், இரு நாடுகளுக்குமிடையே போர் பதற்றம் சூழந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் சீனர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று சீனா அரசு எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் “அமெரிக்காவில் வசிக்கும் சீனர்கள் பொது இடங்களுக்குச் செல்வதற்கு முன்னர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளவேண்டும்” என்று எச்சரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x