Published : 06 Jan 2020 10:36 AM
Last Updated : 06 Jan 2020 10:36 AM

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான நியமன கலந்தாய்வு ஜனவரி இறுதியில் நடைபெற உள்ளதாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,150 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் (நிலை-1) பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 580 பேர் தேர்வு எழுதினர்.

இதில் தரவரிசையின்படி முன்னிலையில் 3,833 பேருக்கு நவம்பரில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இதைத்
தொடர்ந்து தேர்ச்சி பெற்றவர்களுக்கான பட்டியலும் வெளியானது.

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து ஒரு மாதத்துக்கும் மேல் ஆகியும் இன்னும் பணிநியமன கலந்தாய்வு குறித்து அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இதனால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘உள்ளாட்சி தேர்தல் காரணமாக கலந்தாய்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இருந்து பணியிட விவரங்கள் முழுமையாக பெறப்பட்டுள்ளன. அடுத்த வாரம் அரசின் ஒப்புதல் பெற்று பொங்கலுக்கு பின் கலந்தாய்வு மூலம் பணிநியமன ஆணைகள் வழங்கப்படும்’’என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x