Published : 06 Jan 2020 07:58 AM
Last Updated : 06 Jan 2020 07:58 AM

இந்திய ஆராய்ச்சி போதுமானதாக இல்லை: சி.என்.ஆர் ராவ் கவலை

கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் 107-வது இந்திய அறிவியல் மாநாடு ஜனவரி 3-ம் தேதி தொடங்கியது. இந்த மாநாட்டில் ‘குழந்தைகளுக்கான அறிவியல்’ என்ற தலைப்பில், இந்தியாவின் மூத்த வேதியியலாளரும் பாரத் ரத்னா விருது பெற்றவருமான விஞ்ஞானி சிஎன்ஆர் ராவ் தலைமை ஏற்று பேசியதாவது:

அறிவியலில் சீனா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, அமெரிக்கா வெளியிடும் ஆராய்ச்சி முடிவுகளுக்கு நிகராக சீனாவும் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடுகிறது. அறிவியல் மற்றும் பொறியியல் தொடர்பான ஆய்வில் உலகளவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஆனால், வெளியீடுகளின் அளவைப் பற்றி நான் நினைக்கவில்லை. ஆனால். ஆராய்ச்சி வெளியீடுகளின் தரம் முக்கியமானது. அதன்படி, இந்திய ஆராய்ச்சி வெளியீடுகளின் தரமும், அளவும் போதுமானதாக இல்லை. இவ்வாறு சிஎன்ஆர் தெரிவித்தார்.

குப்பைகள் மூலம் ரூ.4 கோடி ஈட்டும் மத்திய பிரதேச நகரம்

இந்தூர்

இந்தூர் மாநகராட்சியின் ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் ஆலோசகர் அசாத் வார்சி கூறியதாவது:

இந்தூர் மாநகராட்சியில் ஒரு நாளைக்கு 1,200 டன் அளவுக்கு குப்பை கிடைக்கிறது. இந்தூர் நகரத்தில் அரசு - தனியார் நிறுவனம் ரூ .30 கோடியை முதலீடு செய்துள்ளது. பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட குப்பைகளை உலரவைக்கிறது.

பின்னர், ரோபோட்டிக் வசதி மூலம் குப்பைகளை பிளாஸ்டிக், கண்ணாடி மற்றும் இரும்பு என தனித்தனியாக தரம் பிரித்து வருகிறது. அந்நிறுவனத்திடம் போடப்பட்ட ஒப்பந்தப்படி, இந்தூர் மாநகராட்சிக்கு ரூ. 1.5 கோடி வருமானம் கிடைக்கிறது. மேலும், செங்கல், டைல்ஸ் போன்ற கட்டிட கழிவுகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 2.5 வருமானம் கிடைக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x