Published : 06 Jan 2020 07:52 AM
Last Updated : 06 Jan 2020 07:52 AM

இன்று என்ன? - பிரபல கவிஞர் கலீல் ஜிப்ரான் பிறந்த தினம்

உலகம் போற்றும் கவிஞர்களின் வரிசையில் என்றும் நிலைத்திருக்கக் கூடியவர் கவிஞர் கலீல் ஜிப்ரான். லெபனானிய- அமெரிக்கா எழுத்தாளரான இவரது கவிதைகள், கதைகளின் தாக்கம் உலகம் முழுவதும் விசாலம் அடைந்துள்ளன.

இவர் 1883-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி லெபனான் நாட்டில் உள்ள ஷர்ரீ எனும் கிராமத்தில் பிறந்தார். ஜிப்ரான் கவிஞர் மட்டுமல்லாமல் சிறந்த ஓவியரும் ஆவார். மேலும் இவர் ‘நைம்ப்ஸ் ஆஃப் தி வேலி’, ‘ஏ டியர் அண்டு ஏ ஸ்மைல்’, ‘ஸ்பிரிட் ரிபேலியஸ்’, ‘பிரோக்கன் வின்ஸ்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

இவரது ‘தி ப்ராஃபட்’ (தீர்க்கதரிசி) எனும் நூல் மிகப் பிரபலமானது. இந்த நூல் உலகில் நூற்றுக்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x