Published : 01 Jan 2020 01:50 PM
Last Updated : 01 Jan 2020 01:50 PM

நெட் தேர்வில் உதவிப் பேராசிரியர் பணிக்கு 60 ஆயிரம் பேர் தகுதி

நெட் தேர்வில் உதவிப் பேராசிரியர் பணிக்கு 60 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளதாக தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறவும், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் நெட் (NET) தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். வருடத்திற்கு இரண்டு முறை இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

2019-ம் ஆண்டுக்கான இரண்டாவது நெட் தேர்வு டிசம்பர் 2 முதல் 6-ம் தேதி வரை நடைபெற்றது. 10.34 லட்சம் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில் 7.93 லட்சம் பேர் தேர்வெழுதினர்.

நாடு முழுவதும் 219 நகரங்களில் உள்ள 700 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு மையங்கள் அனைத்திலும் 1,450-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. 81 பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.

விடைக் குறிப்புகளும் அண்மையில் வெளியிடப்பட்டன. இந்நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியாகின. இதில் 60,147 பேர் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகளை https://ugcnet.nta.nic.in/webinfo/public/home.aspx என்ற இணையப் பக்கத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x