Last Updated : 31 Dec, 2019 04:25 PM

 

Published : 31 Dec 2019 04:25 PM
Last Updated : 31 Dec 2019 04:25 PM

புதுச்சேரியில் பறவை உற்றுநோக்கல்; பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு- அனைவரும் கலந்துகொள்ளலாம்

புதுச்சேரி

புதுச்சேரி அறிவியல் மன்றங்கள் மற்றும் யூனிவர்சல் சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில், பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு மற்றும் உற்றுநோக்கல் நிகழ்ச்சி, ஊசுடு ஏரியில் ஜனவரி 12-ம் தேதி நடக்கிறது.

பறவைகள் பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டின் சர்வதேச கருப்பொருளாக 'பறவைகளைப் பாதுகாக்கவும்: நெகிழியால் ஏற்படும் மாசுபாட்டுக்கான தீர்வாக இருங்கள்' என்ற தலைப்பில், பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்ச்சி, ஊசுடு ஏரியில் நடைபெற உள்ளது. இதில், கருத்தாளர்கள், பறவை ஆர்வலர்கள், துறை சார் வல்லுநர்கள், அறிவியல் மன்ற மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் அருண் நாகலிங்கம் கூறுகையில், "பறவைகள் தொடர்பான புத்தகங்கள் மூலமும் அவற்றின் ஓசையை பறவைகளின் படங்களின் வழியாகவும் காட்டி விளக்கம் அளிக்கப்பட உள்ளது. வனப் பறவைகள் கணக்கெடுப்பு பட்டியல் மூலம் ஏரியைச் சுற்றியுள்ள பறவைகளை உற்று நோக்கி கணக்கெடுக்கவும் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

உங்களது பகுதியில் பொங்கல் தினங்களில் பறவை பார்த்தல் மற்றும் கணக்கெடுப்பு நடத்தும் எண்ணமிருந்தால் மேற்கண்ட தகவல்களை எவ்வாறு பதிவு செய்வது, பறவைகளின் வேறுபாடுகளைக் கண்டறிவது உட்பட பல அரிய அடிப்படைத் தகவல்களை இந்த நிகழ்ச்சியில் பகிர உள்ளோம். கல்லூரி, பள்ளி மாணவர்கள் உட்பட ஆர்வமுள்ள அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

இதற்கு https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdmcBbcy15N2pgh-RZ8_GcYDXYSNl1cM1JDj1Jbg0MSi62LHw/viewform?usp=pp_url இந்த முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம் இது பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு வாட்ஸ் அப் மூலம் 9894926925 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்'' என்று அருண் நாகலிங்கம் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x