Published : 29 Dec 2019 08:06 AM
Last Updated : 29 Dec 2019 08:06 AM

வீட்டில் தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் பிரதமர் உரையை கேட்க பள்ளிக்கு வரலாம்: சேலத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்

சேலத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொள்ளும் முதல்வர் பழனிசாமி.

சேலம்

வீட்டில் தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் பிரதமரின் உரையை கேட்க பள்ளிக்கு வரலாம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

கடந்த 27-ம் தேதி நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்க ளிக்க சேலம் வந்த முதல்வர் பழனி சாமி நேற்று காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்டு சென்றார். முன்னதாக, விமான நிலையத்தில் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:

பொங்கல் விடுமுறை நாளில் வரும் 16-ம் தேதி பிரதமரின் உரையை கேட்க மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டிய அவசிய மில்லை என்று ஏற்கெனவே தெளி வாக அறிவித்து விட்டோம். வீட்டில் தொலைக்காட்சி இல்லாத மாணவர் கள் பள்ளிக்கு வந்து பிரதமர் உரையை கேட்கலாம் என்று மட்டுமே கூறியுள்ளோம்.

ஆளுமை திறன்மிக்க மாநிலம்

மத்திய அரசு 50 வகை காரணி களை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து தமிழகத்துக்கு சிறந்த ஆளுமை திறன்மிக்க மாநிலம் என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி. அனைத்து ஊடகங்களும் பாராட் டும் நிலையில், அரசை குறைகூற வேண்டும் என்ற நோக்கில் எதிர்க் கட்சிகள் இதனை ஏற்க மறுக் கின்றன.

தமிழகத்துக்கு 5.6 மதிப்பெண் ணுடன் முதலிடம் கிடைத்துள்ளது. யூனியன் பிரதேசங்களில் காங்கி ரஸ் ஆளும் புதுச்சேரி முதலிடம் பிடித்துள்ளது. இதில் இருந்தே எந்த சிபாரிசும் இல்லாமல் தமிழக அரசு முதலிடம் பெற்று பெருமை சேர்த்துள்ளது என்பதை அனை வரும் உணர வேண்டும்.

சுதந்திரமான தேர்தல்

எந்த பிரச்சினையும் இல்லாமல், யாருடைய தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்துள் ளது. உள்ளாட்சித் தேர்தல் முடிவு களை அறிவிக்கக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் தான் பதில் சொல்ல வேண் டும். வேண்டுமென்றே உள்நோக் கத்துடன் ஒவ்வொரு வழக்கும் போடுகின்றனர். தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்கின்றனர். ஓட்டுகள் எண்ணப்பட்டு அறிவித்த பின்னரே, வெற்றி பெறுபவர்கள் யார் என்பது தெரியவரும்.

ஸ்டாலின் அரசியல் நாடகம்

திமுக தலைவர் ஸ்டாலின் தேவையின்றி நீதிமன்றத்தை நாடு கிறார். அதிமுகவைப் பொருத்த வரை தேர்தல் நடைமுறையில் யாரும் தலையிடக் கூடாது என்பது தான் எங்களுடைய கருத்து. ஸ்டாலின் மக்களை குழப்பி அரசி யல் நாடகம் ஆடுகிறார்.

2010 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது பின்பற்றப் பட்ட வழிமுறைகள்தான் தற் போதும் பின்பற்றப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பொதுமக்கள் அச்சம் கொள் ளத் தேவையில்லை. 2003 ம் ஆண்டு மத்திய பாஜக ஆட்சியில் திமுக அங்கம் வகித்தபோது மக்கள் தொகை கணக்கெடுப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

கடந்த 2010-ம் ஆண்டு காங்கி ரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகித்த போது மக்கள் தொகை கணக் கெடுப்புப் பதிவேடு முறை அறிமுகப் படுத்தப்பட்டது. ஆட்சியில் அங்கம் வகித்தபோது மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த திமுக இப்போது, வேண்டுமென்றே திட்டமிட்டு, உள்நோக்கத்துடன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

அரசியல் செல்வாக்கில்லாதவர்கள்

தமிழகத்தில் தற்போது தேசிய குடியுரிமை பதிவேடு கிடையாது. மத்திய அமைச்சர் இதுகுறித்து தெளிவாக விளக்கிய பிறகு மக்களி டையே அரசியல் செல்வாக்கு இல்லாத எதிர்க்கட்சிகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்களை குழப்பி வருகிறார்கள். பொது மக்களும், இளைஞர்களும், சிறுபான்மையினரும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மருத்துவத் துறையில் தமிழ கத்தில் அதிக ஒதுக்கீடு இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடி யாது. இந்தியாவிலேயே நடப் பாண்டு தமிழகத்தில்தான் 350 பேருக்கு, புதிதாக மருத்துவம் படிக்கும் வகையில் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. வேறு எப்போதும் இல்லாத வகையில் ஒரே ஆண்டில் 9 மருத்துவக் கல்லூரி தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டு புதிதாக 900 பேர் புதிதாக மருத்துவ படிப்பில் சேர உள்ளனர்.

நெல்லுக்கான கொள்முதல் விலை ஒவ்வொரு ஆண்டும் உயர்த் தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு உயர்த்துவது குறித்து சம்பந்தப் பட்ட அமைச்சரிடம் ஆலோசித்து அறிவிக்கப்படும். மின் ஊழியர் களின் பெரும்பாலான கோரிக்கை கள் நிறைவேற்றி தரப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளதை கருத்தில் கொண்டு, மின் ஊழி யர்கள் போராட்டத்தை கைவிட்டு அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு முதல்வர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x