Last Updated : 28 Dec, 2019 04:01 PM

 

Published : 28 Dec 2019 04:01 PM
Last Updated : 28 Dec 2019 04:01 PM

இது கோபத்துக்கான இடமல்ல- மாறும் சிபிஎஸ்இ பள்ளிகள்!

சிபிஎஸ்இ தனது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகள் அனைத்தையும் கோபம் இல்லாத இடமாக மாற்ற நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

ஆசிரியர்கள், பெற்றோர்கள், நிர்வாக ஊழியர்கள் ஆகிய அனைவரும் தங்களின் கோபத்தைக் கட்டுபடுத்தி மாணவர்களுக்கு ஓர் உதாரணமாகத் திகழ வேண்டும். அமைதியின் மதிப்பை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் த்ரிபாதி கூறும்போது, ஆசிரியர்கள், பெற்றோர்கள், நிர்வாகத்தினர், ஊழியர் என அனைவரும் கோபத்தை முழுமையாக விடுத்து பள்ளியை கோபத்துக்கு இடமில்லாத ஒன்றாக மாற்ற முயற்சிக்க வேண்டும்.

ஆசிரியர்கள், கோபத்தில் இருந்து விடுதலை பெறுவதன் மதிப்பை, தாங்களே ஓர் உதாரணமாக இருந்து மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.

இதன்மூலம் அநாவசிய பயம், மரியாதை அளிக்காதது, காயப்படுத்துவது, அவமானப்படுத்துவது ஆகியவற்றை ஒழிக்க முடியும். நமது மாணவர்களின் திறன்களை சீரிய முறையில் வளர்த்தெடுக்க முடியும்.

மாற்றத்தின் முன்னறிவிப்பாளராக குழந்தைகள் இருக்கிறார்கள். பள்ளியில் அவர்கள் என்ன கற்கிறார்களோ அதையே பெற்றோர்களுக்கும் கடத்துகிறார்கள். அம்மா, அப்பா நீங்கள் கோபப்படக் கூடாது என்று பெற்றோரிடம் குழந்தைகள் சொன்னால் எப்படி இருக்கும்? கற்பனை செய்து பாருங்கள் என்று தெரிவித்தார்.

இதையொட்டி, சிபிஎஸ்இ பள்ளிகள் அனைத்துக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி இது கோபத்துக்கான இடமல்ல (anger-free zone) என்று பள்ளி வரவேற்புப் பகுதியிலும் வளாகத்தின் பிற முக்கிய இடங்களிலும் அட்டை வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அனுபவத்தை பள்ளிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, cbsenoanger என்ற ஹேஷ்டேகில் இதை சமூக வலைதளங்களில் பிரபலப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x