Published : 28 Dec 2019 11:22 AM
Last Updated : 28 Dec 2019 11:22 AM

மத்திய அரசு பணிகளுக்கு நாளை எழுத்துத் தேர்வு

சென்னை

மத்திய அரசு பணிகளுக்கான எழுத்துத்தேர்வு நாளை (ஞாயிறு) நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 நகரங்களில் தேர்வு நடத்தப்படுகிறது.

இதுதொடர்பாக பணியாளர் தேர்வாணையத்தின் (எஸ்எஸ்சி) தென்மண்டல துணைச் செயலாளர் எஸ்.ராஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

மத்திய அரசு பணியாளர் தேர் வாணையத்தால் (தென்மண்ட லம்) நடத்தப்படும் இளநிலை பொறியாளர் (சிவில், எலக்ட் ரிக்கல், மெக்கானிக்கல், மற்றும் குவாண்டிடேட்டிவ் சர்வேயிங் அண்ட் கண்டிராக்ட்ஸ்) பணிக்கான 2-வது கட்ட தேர்வு (விரிவான வகை) 29-ம் தேதி (ஞாயிறு) பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

எழுதும் திறன் பாதிக்கப்பட்ட லோகோமோட்டார் மாற்றுத்திற னாளிகள் மட்டும் மாலை 4.40 மணி வரை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். இத்தேர்வில் 1,007 பேர் கலந்துகொள்கிறார்கள்.

இதே போன்று ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான 3-வது கட்ட (விரிவான வகை) 29-ம் தேதி (ஞாயிறு) காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறுகிறது. இத்தேர்வை 4,419 பேர் எழுதுகிறார்கள். பார்வைத்திறன் குறைபாடு, பெருமூளை வாதம், எழுதும் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் பகல் 12.20 மணி வரை எழுத அனுமதிக்கப்படு வர்.

8 நகரங்களில் தேர்வு மையம்

மேற்குறிப்பிட்ட இரு தேர்வு களும் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை மற்றும் ஆந்திராவில் கர்நூல். திருப்பதி. விஜயவாடா, விசாகப்பட்டினம், தெலங்கானாவில் ஹைதராபாத் ஆகிய 8 நகரங்களில் நடைபெறு கின்றன.

விண்ணப்பதாரர்கள் மின்னணு அனுமதி சான்றிதழையும் பிறந்த தேதிக்கான அசல் ஆவணத்தை யும் கொண்டுவந்தால் மட்டுமே தேர்வுக்கூடத்துக்குள் அனுமதிக் கப்படுவர். மின்னணு அனுமதிச் சீட்டை தேர்வாணைய இணைய தளத்திலிருந்து (sscsr.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வறைக்குள் ஸ்மார்ட் / டிஜிட் டல் கைக்கடிகாரங்கள், புத்தகம், காகிதத் துணுக்குகள், செல்போன், கால்குலேட்டர் போன்ற மின்னணு சாதனங்கள் அனுமதிக்கப்படாது.

கூடுதல் விவரங்களுக்கு, சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள பணியாளர் தேர்வாணை யத்தின் தென்மண்டல அலுவல கத்தை 044 28251139 & 9445195946 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x