Published : 28 Dec 2019 11:19 AM
Last Updated : 28 Dec 2019 11:19 AM

சிடெட் தேர்வு முடிவுகள் வெளியீடு: 22.55 சதவீதம் பேர் தேர்ச்சி 

நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதிய மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளை 19 நாட்களில் சிபிஎஸ்இ வெளியிட் டுள்ளது.

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரிய ராக பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் படி மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடெட்) ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படுகிறது.

இந்த தேர்வு மொத்தம் 2 தாள் களை கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.

அதன்படி நடப்பு ஆண்டுக் கான சிடெட் தேர்வு, நாடு முழு வதும் 2,935 மையங்களில் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 24 லட்சத்து 5 ஆயிரத்து 145 பட்டதாரிகள் எழுதினர்.

இந்நிலையில் சிடெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு கடந்த 23-ம் தேதி வெளி யானது. தொடர்ந்து சிபிஎஸ்இ வரலாற்றிலேயே முதன்முறையாக வெறும் 19 நாட்களில் சிடெட் தேர்வு முடிவுகள் www. cbse.nic.in என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட் டுள்ளது.

இந்த தேர்வை எழுதியவர் களில் 5 லட்சத்து 42 ஆயிரத்து 285 பேர் (22.55%) மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 9 பேர் மாற்றுப் பாலினத்தவர்கள் ஆவர். தேர்ச்சி பெற்ற வர்களுக்கான சான்றிதழ் விரை வில் இணையதளத்தில் பதி வேற்றம் செய்யப்படும். அந்த சான்றிதழ் 7 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x