Last Updated : 27 Dec, 2019 05:39 PM

 

Published : 27 Dec 2019 05:39 PM
Last Updated : 27 Dec 2019 05:39 PM

பிங்க் அரங்கம், பிங்க் கழிப்பறைகள்: புத்தாண்டுப் பரிசாக அலகாபாத் பல்கலை. அறிவிப்பு

புத்தாண்டுப் பரிசாக, மாணவிகளுக்கு இளஞ்சிவப்பு நிற அரங்கம் மற்றும் கழிப்பறைகளைக் கட்டி, அலகாபாத் பல்கலைக்கழக நிர்வாகம் வழங்குகிறது.

இந்த அரங்கத்தில் 100 மாணவிகள் ஒரே நேரத்தில் அமர முடியும். 1,200 சதுர அடி அளவில் கலைத் துறை அருகே இந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதனுடன் 3 பிங்க் நிற கழிப்பறைகளும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கம் அடுத்த ஆண்டு ஜனவரியில் இருந்து இயங்க உள்ளது.

முன்னதாக இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 15 மாணவிகள் துணை வேந்தரைச் சந்தித்து, பொது அரங்கம் மற்றும் கழிப்பறையின் தேவை குறித்து விளக்கினர். இதையடுத்து பல்கலை. நிர்வாகம் இதைக் கட்டமைத்துள்ளது.

இதுகுறித்து பல்கலை. செய்தித் தொடர்பாளர் சித்ரஞ்சன் குமார் கூறும்போது, ''இந்தத் துறைக்கு என்றில்லாமல் அனைத்துத் துறைக்குமான மாணவிகளுக்கும் பொது அரங்கம் இது. இங்கு அமரும் வசதியுடன் ஆங்கிலம், இந்தி செய்தித் தாள்கள் வைக்கப்படும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் வழங்கப்படும்'' என்று தெரிவித்தார்.

அலகாபாத் பல்கலைக்கழகத்தில் 23 ஆயிரம் மாணவர்கள் நேரடியாக வந்து படிக்கின்றனர். இதில் 7,300 பேர் மாணவிகள் ஆவர். அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படும்போது, இடையில் கழிப்பறைக்குச் செல்லவோ ஆசுவாசப்படுத்திக் கொள்ளவோ இடம் இல்லாமல் அவர்கள் அவதிப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x