Last Updated : 19 Dec, 2019 02:10 PM

 

Published : 19 Dec 2019 02:10 PM
Last Updated : 19 Dec 2019 02:10 PM

விருதுநகர் அரசுப்பள்ளி ஆசிரியருக்கு தகவல் தொழில்நுட்பத்தில் தேசிய விருது: மத்திய அரசு அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம், நாரணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியர் கருணைதாஸுக்கு மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் கருணைதாஸ் தனது மாணவர்களுக்கு கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற கணக்குகளை விரைவாகவும் ஆர்வமாகவும் செய்ய டக்ஸ்மேத்ஸ் மூலமாகவும், மாணவர்களின் பேச்சுத்திறன், பாடும் திறன் வளர்க்க அடாசிட்டி மூலமாகவும் படங்களை வீடியோக்களாக உருவாக்க போட்டோஸ்டோரி மூலமாகவும் கற்பித்து வருகிறார். தேர்வு என்றாலே பயப்படும் மாணவர்கள், தேர்வு என்றவுடன் ஓடோடி வந்து டேப்லட்டைப் பயன்படுத்தி க்யூஆர் கோடு மூலமாகத் தேர்வு எழுதுகின்றனர்.

பாடங்களைக் கற்பிக்க பாடப்பகுதியினை மைக்ரோசாப்ட் பவர்பாயிண்ட் மூலம் டிஜிட்டல் பாடமாக மாற்றி கற்பித்து புதுமை படைத்து வருகிறார் இவர். தன் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி பல்வேறு பள்ளி மாணவர்களுக்கும் இணையம் முலம் பாடம் நடத்தும் ஆசிரியை கருணைதாஸ், தன் பள்ளியில் பயிலும் 740 மாணவர்களுக்கும் கணினியை பயன்படுத்த கற்றுக்கொடுத்துள்ளது கூடுதல் சிறப்பு. இதனால் இப்பள்ளி மாணவர்கள் பல விருதுகளையும் வென்றுவந்துள்ளனர்.

ஆசிரியர் கருணைதாஸ் நீல நிறச்சட்டை அணிந்து வலது ஓரத்தில் நிற்கிறார்.

பல்வேறு வகையில் அரசுப் பள்ளியில் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி வருவதால், பள்ளி கடந்த 2015ம் கல்வியாண்டில் “தொழில்நுட்பம் வழிக் கற்பித்தலில் சிறந்த பள்ளி -2015” என்னும் தேசிய விருது ஐசிடிஏசிடி என்னும் நிறுவனம் வழங்கியது. 2018 ல் மைக்ரோசாப்ட் நிறுவனம் மூலம் உலகளவில் சிங்கப்பூரில் வைத்து நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்கள் சந்திப்பில் இந்தியளவில் ஓரே ஒர் அரசுப்பள்ளி ஆசிரியராக இவரைத் தேர்வு செய்தது.

அதோடு, முகு இன்டர்நேசனல்ல் பவுண்டேசன் 2017 ஆம் கல்வி ஆண்டிற்குரிய தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் விருதும்,2015ல் என்.டி.டிவி மற்றும் பியர்சன் நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்திக் கற்பிக்கும் சிறந்த ஆசிரியர் விருது வழங்கியுள்ளது.

தற்போது இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை (MHRD) தகவல் தொழில் நுட்ப தேசிய விருதிற்குரிய ஆசிரியர்களைத் தேர்வு செய்துள்ளது. தமிழகத்தில் இருந்து 3 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இவ்விருதுக்கு தேர்வாகி உள்ளனர். விருதுநகர் மாவட்டம் கருணைதாஸ், காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் செல்வக்குமார், விழுப்புரம் மாவட்டம் லாசர் ரமேஷ் ஆகிய மூன்று ஆசிரியர்களும் வருகின்ற டிசம்பர் 23ம் தேதி புதுடில்லியில் ஜன்பத் சாலை டாக்டர் அம்பேத்கார் இண்டர்நேசனல் செண்டரில் நடைபெறும் விழாவில் விருதுபெற உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x