Published : 19 Dec 2019 12:09 PM
Last Updated : 19 Dec 2019 12:09 PM

உதகையில் உயர் கல்வி மாநாடு: தமிழக ஆளுநர் தொடங்கி வைத்தார்

உதகையில் உயர்கல்வி மாநாட்டை இன்று (டிச. 19) தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம், உதகை ஆளுநர் மாளிகையில் ராஜ்பவன் சென்னை மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனம் - திருச்சி இணைந்து நடத்தும் 'வேந்தரின் இலக்கு 2030: தொழில்துறை சகாப்தம் 4.0-ல் புதுமையான கல்வி முறை' என்ற தலைப்பில் உயர் கல்வி மாநாடு இன்று தொடங்கியது.

டிஜிட்டல் தொழில் உற்பத்திக்குத் தேவையான மனித வளத்துக்கும், இன்றைய பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் திறனுக்கும் உள்ள இடைவெளியை ஆராய்ந்து அதற்கேற்ப கல்விமுறை மற்றும் பாடத்திட்டத்தினை உருவாக்க இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் ஆனந்த் ராவ் பாட்டில் அனைவரையும் வரவேற்றார். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 20 துணைவேந்தர்கள், திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தின் பேராசிரியர்கள், தொழில்துறை வல்லுநர்கள், தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக நிறுவனத்தின் பேராசிரியர் ராமச்சந்திரன், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் உறுப்பினர் செயலர் மல்ஹோத்ரா, காக்னிசன்ட் இந்தியத் தலைவர் ராம்குமார் ராமமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி ஐஐஎம் இயக்குநர் பீமராய் மெத்ரி நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x