Published : 17 Dec 2019 07:52 AM
Last Updated : 17 Dec 2019 07:52 AM

மேற்கு வங்கத்தை பின்பற்றி தமிழகத்திலும் கொண்டுவர வேண்டும்: பாடத்திட்டத்தில் பாம்புகள் குறித்த விழிப்புணர்வு பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

சென்னை

மனோஜ் முத்தரசு

மேற்கு வங்கத்தை பின்பற்றி மாண வர்களுக்கு பாம்புகள் பற்றிய விழிப்புணர்வை கல்வித்துறை செய்ய வேண்டும் என்று பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த சிறுமி, தான் படிக்கும் அரசுப் பள்ளி வளாகத்தில் பாம்பு கடித்து இறந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர் வலையை ஏற்படுத்தியது. இந்தியா போன்ற நாடுகளில் பாம்பு உள்ளிட்ட பிற உயிரினங்களால் தாக்குதலுக்கு ஆளாகி அதிகம் பேர் உயிரிழக்கின்றனர்.

உலக அளவில் ஆண்டுக்கு சராசரியாக 50 லட்சம் பேர் பாம்பு கடிக்கு ஆளாகிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 81 ஆயிரம் முதல் 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். சுமார் 10 லட்சம் மக்கள் தங் களின் இயல்பு வாழ்க்கையை இழக்கிறார்கள்.

இந்தியாவை பொறுத்தவரை ஆண்டுக்கு 28 லட்சம் பேர் பாம்புக் கடிக்கு ஆளாகி அதில், 50 ஆயிரம் பேர் இறப்பதாகவும் 47 ஆயிரம் மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கை இழப்பதாகவும் சுமார் 5 லட்சம் பேர் பிற நோய்க்கு ஆளாகிறார்கள் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பாம்புக் கடிக்கு ஆளாகி, மரணத்தை தழுவும் மக்களில் 95 சதவீதம் பேர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள்தான்.

அதிலும், 52 சதவீதத்துக்கு மேலாக குழந் தைகள், இளைஞர்கள்தான் பாதிக் கப்படுகிறார்கள். பாம்புக் கடிக்கு அதிகம் ஆளாகும் மக்களின் எண் ணிக்கையில் உத்தரப்பிரதேசம், கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழகம் உள்ளது.

இந்நிலையில், பாம்பு பற்றிய பல தகவல்களை கொண்ட பாடத் திட்டத்தை மேற்கு வங்க அரசு கொண்டு வந்துள்ளது. பாம்புகள் பற்றிய பொய்யான தகவல்கள், முதலுதவி செய்யக்கூடியவை, செய்யக் கூடாதவை, பாம்புகளின் படங்கள் என முழுமையான தகவல் கள் அனைத்தும் 8-ம் வகுப்பு பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

பாம்பு பால் குடிக்கும், கடித்த இடத்தில் வாய் வைத்து விஷத்தை உறிஞ்சுவது போன்ற தவறான புரிதல்களை விளக்கி விழிப்புணர்வு நோக்கத்துடன் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழக பள் ளிக் கல்வித் துறை பாடத்திட்டத் தில், பல்லுயிர் பெருக்கத்தில் பாம்புகளின் பங்கு என்ன என்ற அறிவியல் பாடம் மட்டுமே இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, “கிராமப்புறங்களை அதிகமாக கொண்ட மாவட் டங்களுக்கு பாம்பு பற்றிய விழிப்பு ணர்வு அதிகம் தேவைப்படுகிறது. பாம்புகள் பற்றிய தகவல்களை முழுமையாக மாணவர்களுக்கு விளக்கும் வகையில் விழிப்புணர்வு செய்ய பள்ளிக் கல்வித் துறை ஆவன செய்யவேண்டும்” என்றனர்.

இது ஒருபுறமிருக்க, பல்லுயிர் பெருக்கத்தின் முக்கிய பங்கு வகிக்கும் பாம்புகள் இனம் அழிந்துக் கொண்டும் இருக்கிறது. மனிதர்களின் கண்களில்படும் 85 சதவீத பாம்புகள் அடித்துக் கொல் லப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x