Published : 16 Dec 2019 09:26 AM
Last Updated : 16 Dec 2019 09:26 AM

தமிழ் உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வுக்கான தகவல் தொகுப்பு வெளியீடு

நீட் தேர்வுக்கான தகவல் தொகுப்பு முதல் முறையாக தமிழ் உள்ளிட்ட 10 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் அரசு மற்றும்தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு 2020-21-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது.

தேசிய தேர்வு முகமை நடத்தும்இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது www.nta.ac.in / www.ntaneet.nic.in என்ற இணையதளங்களில் கடந்த கடந்த 2-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்க வரும் 31-ம் தேதி கடைசி நாள் என்பதால் தமிழகம் உட்பட நாடுமுழுவதும் மாணவ, மாணவிகள் நீட் தேர்வுக்கு ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர்.

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தி வந்த நீட் தேர்வை கடந்த ஆண்டு முதல் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. நீட் தேர்வு குறித்த அனைத்து விவரங்களும் அடங்கிய தகவல் தொகுப்பு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வந்தது.

இந்நிலையில், அனைத்து மாநில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க வசதியாக தகவல் தொகுப்பு நீட் தேர்வு நடைபெறும் தமிழ், ஆங்கிலம், இந்தி,கன்னடம், குஜராத்தி, மராத்தி,ஒடியா, அஸ்ஸாமி, வங்கம், உருதுஆகிய 10 மொழிகளில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வு நடைபெறும் தெலுங்கு மொழியில் மட்டும் தகவல் தொகுப்பை தேசிய தேர்வு முகமை வெளியிடவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x