Published : 14 Dec 2019 01:22 PM
Last Updated : 14 Dec 2019 01:22 PM

இந்தியாவில் 5ஜி ஆராய்ச்சி: சென்னை ஐஐடி, எஸ்டிஎல் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தியாவில் 5ஜி ஆராய்ச்சியை நடத்த சென்னை ஐஐடி மற்றும் எஸ்டிஎல் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் கீழ் 5ஜி தொழில்நுட்பம் குறித்தும் அதன் அடுத்தகட்ட வளர்ச்சி பற்றியும் ஆய்வு நடத்தப்படும்.

இன்றைய நவீன காலகட்டத்தில் தொழில் வளர்ச்சியில் டேட்டா முக்கியப் பங்கு வகிக்கிறது. அதன் தேவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் 5ஜி தொழில்நுட்பம் குறித்த ஆய்வு இன்றியமையாத ஒன்றாகிறது. கல்வி மற்றும் ஆராய்ச்சி அறிவில் ஐஐடியும் 5ஜி தொழில் நிபுணத்துவத்தில் எஸ்டிஎல்லும் (ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் லிமிடெட்) இணைந்து செயல்படும்.

ஐஐடி - எஸ்டிஎல் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம், ஐஐடி இயக்குநரும் பேராசிரியருமான பாஸ்கர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. உடன் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவர் டேவிட் கோயில்பிள்ளை, சர்வதேச மற்றும் முன்னாள் மாணவர்கள் தொடர்புக்கான தலைவர் மகேஷ் பஞ்சக்னுலா, எஸ்டிஎல் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதுகுறித்துப் பேசிய பேராசிரியர் டேவிட் கோயில்பிள்ளை, ''இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்குக் காரணமாக இருந்த எஸ்டிஎல் நிறுவனத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதன் மூலம் 5ஜி தொழில்நுட்பத்தின் அடிப்படை ஆராய்ச்சி மற்றும் கட்டமைப்பு பலப்படுத்தப்படும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x