Last Updated : 14 Dec, 2019 12:03 PM

 

Published : 14 Dec 2019 12:03 PM
Last Updated : 14 Dec 2019 12:03 PM

தொடக்கப் பள்ளிகளில் நூலகம் கட்டாயம்: உ.பி. அரசு அறிவிப்பு

மாதிரிப்படம்

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நூலகம் கட்டாயம் அமைக்கப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அடிப்படைக் கல்வித் துறை சிறப்பு செயலாளர் விஜய் கிரண் ஆனந்த் கூறும்போது, ''மாநிலம் முழுவதும் சுமார் 1.58 லட்சம் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், வரும் மார்ச் மாதத்தில் நூலகங்கள் அமைக்கப்படும்.

என்சிஇஆர்டி மற்றும் என்பிடி உதவியுடன் இந்த முன்னெடுப்பு தொடங்கப்படும். இதன்படி ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் 500 முதல் 1000 புத்தகங்கள் வரை வைக்கப்படும். இதன் மூலம் இளம் வயதிலேயே குழந்தைகள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த முடியும்.

அதேபோல பள்ளி வளாகங்களில் படிக்கும் இடங்களையும் ஏற்படுத்துமாறு பள்ளிகளிடம் கோரியுள்ளோம். ஒவ்வொரு பள்ளியிலும் நூலகத்துக்குச் செல்ல குறிப்பிட்ட்ட நேரத்தில் மாணவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். அவர்கள் விரும்பும் நேரத்தில் படிக்க அனுமதிக்க வேண்டும்.

இதில் சமூகத்தின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். இதை முன்னிட்டு தன்னார்வலர்களிடம் இருந்து புத்தகங்களைப் பெறவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆசிரியர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தாமாக முன்வந்து புத்தகங்களை அளிக்கும் தன்னார்வலர்களின் புகைப்படங்கள் பதிவேற்றப்படுகின்றன'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x