Published : 14 Dec 2019 11:04 AM
Last Updated : 14 Dec 2019 11:04 AM

என்எம்எம்எஸ் தேர்வு நாளை நடக்கிறது

சென்னை

ஏழை மாணவ, மாணவிகளின் மேல்நிலைக் கல்வி தடைபடக் கூடாது என்ற நோக்கில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதற்கு தகுதிவாய்ந்த மாணவ, மாணவிகளை தேர்வு செய்ய ‘தேசிய வருவாய் - திறன் தேர்வு’ (என்எம்எம்எஸ்) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக் கும் மாணவ, மாணவிகள் இத் தேர்வை எழுதலாம். பிளஸ் 2 படிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இத்தேர்வு நாளை நடக்க உள்ளது.

தமிழகம் முழுவதும் 534 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 51,292 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். காலை 9.30 முதல் 11 மணி வரை மனத்திறன் தேர்வும், 11.30 முதல் மதியம் 1 மணி வரை படிப்பறிவுத் திறன் தேர்வும் நடைபெறும். காலை 8.30 மணிக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x